Author: admin

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த விபத்து வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மற்றவர்களின் QR குறியீடுகளை பெற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் (03) நாளையும் (04) எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 4 மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூடுதல் நேர கொடுப்பனவுகளை கட்டுப்படுத்திய போதிலும் தடையின்றி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தட்டுப்பாடின்றி போதுமான எரிபொருள் இருப்புக்களை வழங்கும் வகையில் இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

பொசன் நோன்மதி முன்னிட்டு அநுராதபுரம் புனித நகருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற இடங்களில் டைவிங் செய்வதை தடுக்க தேவையான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார். போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் பயணிப்பவர்களிடமும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, புனித நகரம் தொடர்பான குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் நுவன் குலதுங்க பக்தர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று இரண்டு விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம். குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின. இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம். இந்த பொசன் பௌர்ணமி…

Read More

கடந்த ஜனவரிக்கு முன்னர் அனைத்து ஒப்பந்தக்காரர்களினதும் நிலுவைத் தொகைகளை முற்றாக செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையிலான அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன்களை ரணில் அரசாங்கம் அடைத்துக் கொண்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் காலத்தில் நெடுஞ்சாலைகள் நிர்மாணம், இராணுவத்தினருக்கு உணவுப் பொருள் வழங்கல் போன்ற முக்கிய விடயங்களின் ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகளை நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது, இதன் காரணமாக இலங்கை எங்கும் நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அரசாங்கத்திற்கான வழங்கல் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். # வரி விதிக்கப்படுமா? இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு வரி அறவிடப்படும் என்பதல்ல. வருமான வரிக் கணக்கின் கீழ் நலன்புரிப் பலன்களை விநியோகிக்கவே 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களின் பதிவு அவசியம். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூர் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரிக் கணக்கின் விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான சலுகைகள் குறித்து அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்ற ர்வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

கடந்த மே மாதம் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு இலட்சத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. எனினும் 2022 மே மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் எண்ணிக்கை 175.5 சதவீதம் அதிகமாகும். மே மாதம் சுற்றுலா பருவம் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 524,486 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். பிரதான வீதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் இருவர் மற்றும் புதியகாத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் வைத்து மற்றொருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமுமிருந்து சுமார் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செயப்பட்டுள்ள நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More