Author: admin

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5ஆயிரத்து 80 டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 43 ஆயிரத்து 393 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல் மாகாணத்தில் மாத்திரம் 40 தசம் 8 வீதமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான டெங்கு நோய் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருவதால் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானத்துள்ளது. இதன்படி நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பில் விரைவில் தீர்மானம்அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 246ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,ஆயிரத்து 664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது, இதேவேளை 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால்குறைக்கப்பட்டு ஆயிரத்து ,872 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று 15 வயதுடைய மகளை வீட்டில் வைத்து தந்தையார் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் ஆனுமதித்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஈஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குகாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயார் என பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால் தான் அத்தகைய முடிவுக்கு வரத்தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு யாரோ இதுவரையில் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்

Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (3) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை சுயகலைஞர் மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரி வருவதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை மேற்கோள் காட்டி, தப்பியோடிய மதகுரு ஆகஸ்ட் 7 அன்று இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நித்யானந்தாவுக்கு ‘உடனடி’ மருத்துவ சிகிச்சை தேவை என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆன்மீகத் தலைவரால் நிறுவப்பட்ட தீவு என்று அழைக்கப்படும் ஸ்ரீகைலாசத்தின் இறையாண்மை மாநிலத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாதது குறித்தும் கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறியுள்ளார். நித்யானந்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் இந்தியா டுடேக்கு உறுதிப்படுத்தியது. பலாத்கார குற்றவாளி நித்யானந்த் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2022 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதப்பட்ட கடிதத்தை இந்தியா டுடே அணுகியுள்ளது.…

Read More

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலைமை காரணமாக வெளிநாட்டு தூதுவர்களிடமிருந்து மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கையிருப்பிலுள்ள மருந்துகளைக் கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை முடிந்தளவு முகாமைத்துவம் செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பல நாட்களாகவே, அதிகளவான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் வெளிநாட்டு தூதுவர்களின் உதவியினால் பெறப்பட்டிருந்ததாகவும், தொடர்ந்தும் அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் திரிபோஷாவுக்கான தட்டுப்பாட்டு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்தியா வெறும் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஆரம்பித்த அடுத்தடுத்த கால்பகுதிகளில் இலங்கை அணி அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியது. இதன்மூலம் இரண்டாவது கால்பகுதியில் 24-1, மூன்றாவது கால்பகுதியில் 21-7 மற்றும் நான்காவது கால்பகுதியில் 23-4 என இலங்கை அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டது. எனவே, இறுதியாக இலங்கை அணி 102-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. இலங்கை அணியின்…

Read More

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று(03) மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி நிர்வாகத்திடம் சரக்கு திட்டங்கள், உறுதிப்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும் சரக்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நிதிகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2 மாதங்களுக்கு மசகு எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகளின் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More