Author: admin

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இம்முறை மாநாடு இலங்கைக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக அமையும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளதாக வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி…

Read More

காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு இந்த பணிப்புரையை நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்திருந்தார். கொழும்பு மாவட்டச் செயலாளர், பாதுகாப்பு படையினர், தீயணைப்புப் படை, சுகாதாரத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி, தீயை அணைக்க தேவையான அதிகபட்ச தலையீட்டை வழங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பாக இந்நிலைமையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகள் தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளார்.

Read More

நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,732 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை…

Read More

அனுராதபுரத்தில் இருந்து பொலனறுவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓய பகுதியில் நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பஸ் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 6 பயணிகள் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பு – தொட்டலங்கை கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 80 வீடுகள் சேதமடைந்துள்ளது. அத்துடன் 220 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஜிமாவத்தை பகுதியில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

தென்னாபிரிக்காவில் ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு, சிமானிலே என்ற பெண்மணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். டர்பன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு தலா 10 அவுன்ஸ் அதாவது தலா கால் கிலோ எடையுள்ள வேகவைக்கப்பட்ட கோழிக்கால்கள் உணவாக வழங்கப்பட்டன. கோழிக்கால்களை சிலர் மென்று தின்றனர். சிலர் அப்படியே விழுங்கினர். 60 வினாடிகள் நீடித்த இந்த போட்டியின் முடிவில், 4.26 அவுன்ஸ் அதாவது சுமார் 120 கிராம் எடையுள்ள கோழி கால்களை சாப்பிட்ட, சிமானிலே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

Read More

அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் தேவையற்ற அச்சம் இருக்க வேண்டாம் என குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அஃப்லாடொக்சின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரிபோஷா பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் கிளினிக்குகளில் வழங்கப்படும் திரிபோஷாவை பயன்படுத்த முடியும் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More

யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலோன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் காணப்பட்டவரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மரண விசாரணையின் போது, குறித்த நபர் போதைக்காக ஓடிக்கொலோனை அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வைத்திய பரிசோதனையின் போது இருதய நோயினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Read More

கடமைகள் மற்றும் களப் பணிகளைச் செய்யும்போது, ​​அலுவலகத்தில் பொதுச் சேவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிவதற்கு அனுமதிக்கும் ‘அரசு அதிகாரிகளின் உடை’ தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச நிகழ்வுகளில் தேசிய அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடை.

Read More