Author: admin

புதிதாக நிறுவப்பட்ட தேசிய சபை இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தேசிய சபை கூடவுள்ளதுடன், இதன்போது தேசிய பேரவையின் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய பேரவையை நிறுவுவதற்கான பிரேரணைக்கு கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த பேரவையில் பிரதமர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர். எவ்வாறாயினும் இன்று நடைபெறவுள்ள தேசிய பேரவையில் தான் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதால், நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்…

Read More

நேற்று (28) இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ..! *கரட் 24 தங்கம் 1 கிராம் – 20,840.00 ரூபா *கரட் 24 தங்கம் 1 பவுண் – 166,700.00 ரூபா *கரட் 22 தங்கம் 1 கிராம் – 19,110.00 ரூபா *கரட் 22 தங்கம் 1 பவுண் – 152,850.00 ரூபா *கரட் 21 தங்கம் 1 கிராம் – 18,240.00 ரூபா *கரட் 24 தங்கம் 1 பவுண் – 145,900.00 ரூபா

Read More

‘குழந்தை’ என வரையறுக்கப்பட்ட நபரின் வயதை 16லிருந்து 18 ஆக உயர்த்துவதற்கான திருத்தம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் முன்மொழியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை இன்று தெரிவித்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கடந்த வியாழக்கிழமை (22) பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்படி, “இளைஞர்கள்” என்ற குறிப்பைத் தவிர்க்கவும், முதன்மைச் சட்டத்தை குழந்தைகள் கட்டளைச் சட்டம் என்று மறுபெயரிடவும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. முதன்மைச் சட்டத்தின் 71வது பிரிவு, அந்தப் பிரிவின் துணைப்பிரிவு (6) ஐ ரத்து செய்வதன் மூலம், “குழந்தை அல்லது இளைஞரைத் தண்டிக்கும் எந்தவொரு பெற்றோர், ஆசிரியர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் உரிமையைப் பாதிக்கும் வகையில் இந்தப் பிரிவில் உள்ள எதுவும் கருதப்படாது” என்றும் கருத்துரைக்கபட்டன. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சட்டப்பிரிவு 23ன் நோக்கம், குழந்தைகள் மற்றும்…

Read More

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் உடல் நிறை குறியீட்டின் படி இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரை 18.5 சதவீதத்துக்கு குறைவான தாய்மார்களுள் 15 சதவீதமானவர்கள் உரிய நிறை குறியீட்டை பூரணப்படுத்த முடியாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read More

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (27) காலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியாட்புர வீட்டுத் தொகுதியில் இருந்து டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் இந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார். அதற்காக அவர் 40,000 டொலர்களை அனுப்பியதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சு கூறுகிறது. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நடவடிக்கை எடுத்தார். இந்த வீடுகளை டொலரில் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் இன்று கொள்வனவு செய்த வியாட்புர வீட்டுத் தொகுதியில் 02 படுக்கையறைகள் கொண்ட வீட்டின் பெறுமதி 158 இலட்சம் ரூபா. குறித்த…

Read More

மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று செயற்படுவதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார் மத்திய வங்கிகளின் அறிவற்ற முடிவுகளினால் நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பும் அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார் மத்திய வங்கி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயல்பட்டு, சாமானிய மக்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்விப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் தலைவர் நிவார்ட் கப்ரால் பின்பற்றிய பாதையை நந்தலால் வீரசிங்கவும் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More

நாடளாவிய ரீதியில் அப்பம் மற்றும் முட்டை அப்பம் நுகர்வோர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.அசேல சம்பத் நேற்று (27ம் திகதி) ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அப்பங்களை வாங்குவதைக் தவிர்த்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 5000 க்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக அவர் கூறியுள்ளார்.

Read More

ஹோகந்தர-வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான மகன் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை சென்றுள்ளார். முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தினால் தமது வீடுகளை இழந்த தமக்கு நீதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Read More

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக சந்தை விலைகளின் அடிப்படையில் இவ்வாறு லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் விலையை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரி மற்றும் லாபங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த விலை குறைப்பினை மேற்கொள்ள முடிந்த போதிலும் இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் ஐந்து சந்தர்ப்பங்களில் இதனை செய்யத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலில் 174 ரூபாவும், ஒரு லீட்டர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலில் 65 ரூபாவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யில் 85 ரூபாவும் அரசாங்கம் லாபமீட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த லாபமானது வரி வருமானத்திற்கு மேலதிகமானது என அவர்…

Read More