Author: admin

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Read More

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரண்டும் இருப்பு இல்லை எனவும், இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார் . எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் சாந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

அக்கரைப்பற்று உப தபால் நிலைய வீதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இராசிய தகவலின்படி உப பொலிஸ் பரிசோதகர் நூர்தீன் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான அனஸ், தாஹீர் ஆகியோர் நேற்று (25) குறித்த பிரதேசத்திற்கு சென்று நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 45 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்களை ஜனாதிபதி ஜோ பைடன் இரத்து செய்தார். அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் கல்லூரிப் படிப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு கல்விக்கடன்களை இரத்து செய்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் ஆண்டிற்கு 1,25,000 டொலருக்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்டவர்களுக்கு 10,000 டொலர் வரை கல்விக் கடன் இரத்து செய்யப்படுவதாகவும் மாத வருமானத்தில் 10% வீதமாக காணப்பட்ட கல்விக் கடன் இனி 5 சதவீதமாகக் குறைக்கபடும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Read More

ஜப்பானில் மின்சார உற்பத்திக்காக நவீன, பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து நேற்று (24) நடைபெற்ற பசுமை மாற்ற கருத்தரங்கில் அவா் பேசுகையில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை மின்சார உற்பத்தியில் தவிா்ப்பதற்காக, நாட்டில் அதிநவீனமான, அளவில் சிறிய, பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு நாட்டின் அணு மின் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் ஃபுமியோ கிஷிடா இவ்வாறு கூறியுள்ளாா்.

Read More

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் மாத்திரம் சுமார் 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31,105 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89,775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள முட்டை விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சில உறுப்பினர்களுடன் நேற்று (24) கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அங்கு அவர்கள் வெவ்வேறு விலைகளை முன்மொழிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விலைகள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், வர்த்தமானி அறிவித்தல் மூலம் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பரிந்துரைத்த விலையில் முட்டைகளை வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முட்டை உற்பத்தியாளர் சங்கம், முட்டையொன்றின் அதிகப்பட்ச சில்லறை விலையாக 50 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

Read More

குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார். உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (24) ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.எம்.பி.கே.மாயாதுன்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்

Read More

ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது காணப்படும் நீண்ட வரிசைக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் பதிவினை மேற்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை 1958 எனும் இலக்கத்திற்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk இணையததளமூடாகவோ மேற்கொள்ள முடியும். அதன் மூலம் வரிசையில் நிற்காமல் தொழில் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள கூடிய சேவைகளைப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டி காட்டினார்.

Read More

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள், மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் தொழில், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த அந்த நாடுகளில் குடியுரிமைப் பெற்று பலர் வாழ்கின்றனர். இலங்கை குடியுரிமையைத் துறந்து பிற நாடுகளின் சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப அங்கு குடியுரிமைப் பெற்று பலர் வாழ்ந்து வந்தாலும் தாய் நாட்டின் குடியுரிமையை மீளப் பெறும், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு விசேட தொகுப்பினை நாங்கள் தருகின்றோம். இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை பெற்றிருக்கும் நிலையைக் குறிக்கும். ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை முடிவு செய்யும் பன்னாட்டு மரபு ஏதும் இல்லை. இது அந்தந்த நாடுகளின் சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவாகும். இச்சட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டும் முரணாகவும் ஒன்று மற்றொரு நாட்டின்…

Read More