Author: admin

ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 என்கவுண்டரில் ஷார்ஜாவில் இன்று நடந்த த்ரில்லர் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஞாயிறு அன்று இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் இறுதிப் போட்டியை அமைக்க, கடைசி ஓவரின் 1வது 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை 10-வது இடத்தில் இருந்த நசீம் ஷா அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷதாப் கான் 26 பந்துகளுடன் 36 ரன்களும், ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஃபரீத் அகமது தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் – 129/6 (20) பாகிஸ்தான் – 131/9 (19.2)

Read More

புதிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று நாளை (08) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிப் பிரமாணம் நாளை காலை நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன்போது 30க்கும் மேற்பட்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அஹங்கம – வல்ஹெங்கொட கடற்கரையில் இன்று (7) காலை சடலமொன்று மிதப்பதாக அஹங்கம பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார். அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த பெண்ணை 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வருமாறு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் அந்தப் பெண் முறைப்பாடு அளித்துள்ளார். புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்றபோது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.

Read More

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்ததற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் 19 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) பிரேசில் அபராதம் விதித்துள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் தனியாக சார்ஜரை வாங்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட் கைபேசியுடனும் சார்ஜர் அளிப்பதால், எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் இருப்பதாலேயே வழங்குவதில்லை என ஆப்பிள் தெரிவித்து வருகிறது. எனினும் சார்ஜருடன் மட்டுமே கைபேசி விற்க வேண்டுமென பிரேசில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, சம்சுங் தனது புதிய ஸ்மார்ட் கைபேசிகளுடன் சார்ஜரையும் சேர்த்து விற்று வருகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மாடலை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன்களின் விற்பனைக்கும் பிரேசில் அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

Read More

சட்டவிரோதமான முறையில் அலரிமாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 35, 38 மற்றும் 44 வயதுடைய பாதுக்க மற்றும் வடரெக பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Read More

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இலங்கைக்கு சவாலாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, உலக நிதி மேலாளர்களால் இந்த நாட்டில் உள்ள சர்வதேச பத்திரங்களின் அளவு 20 பில்லியன் டொலர்களுக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் வெளிநாட்டுக் கடன் தொகை 85 முதல் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமரிவின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

Read More

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் சபோரிஜியா அணுமின் நிலையம் பாதுகாப்பு வலயம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதனை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றுள்ளார். போரின் தொடக்கத்தில் இருந்து ரஷ்யாவால் ஆக்கிரப்பில் உள்ள குறித்த ஆலையில் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயத்தைத் தொடர்ந்து, ஷெல் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. உத்தரவிட்டது. எனவே அணுமின் நிலையத்தின் பிரதேசத்தை இராணுவமயமாக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு வலயம் என அறிவித்தமையை ஆதரிப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி…

Read More