Author: admin

கொழும்பு மாநகரின் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். கொழும்பில் 19 இடங்களில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்க அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு அனுமதியில்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஓட்டோக்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு தமது போக்குவரத்து தேவைகளுக்கு 5 லீற்றர் எரிபொருள் போதாது என ஓட்டோசாரதிகள் மின்சக்தி அமைச்சரிடம் கையளித்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More

ஈரானின் வடக்கு தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 61பேர் காயமடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என நம்பப்படுகின்றது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், சிறைச்சாலை அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதிக்கு ஈரானிய சிறப்புப் படைகள் செல்வதைக் கண்டதாகவும் 1500தஸ்விர் என்ற ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. ஈரான் முழுவதும் பல வாரங்களாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஈவின் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் நிலைமைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. சிறைச்சாலைக்குள் இருந்து பேசிய தெஹ்ரானின் ஆளுனர் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், சிறைச்சாலையில் சிறு குற்றவாளிகள் இருக்கும் பிரிவில் கலவரம் நடந்ததாகவும், தற்போது நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதாகவும் கூறினார். ஆனால், சிறையில் இருக்கும் உயர் அரசியல் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துவிட்டு…

Read More

2022ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின்படி 13.6 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 116 நாடுகள் இடம்பெற்றிருந்ததுடன், அதில் இலங்கை 65வது இடத்தில் காணப்பட்டது. வளரும் நாடுகளைப் பயன்படுத்தி அயர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள இரண்டு அமைப்புகளால் ஆண்டுதோறும் இந்த உலகளாவிய பட்டினி சுட்டெண் தயாரிக்கப்படுகிறது. நாடுகளில் உணவு பற்றாக்குறை, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, சரிவிகித உணவு வழங்கும் திறன், வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்ற பிரச்சினைகள் இங்கு பரிசீலிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டினி குறியீட்டில் தெற்காசிய நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்து 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 11 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 வீடுகள் முழுமையாகவும் 207 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 660 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 383 பேர் பாதுகாப்பான 36 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் கையிருப்பு உரிய முறையில் பெறப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளால் உலர் உணவின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானையின் தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.30மணியளவில் முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை வீட்டிலிருந்து வெளியேவந்தவரை தாக்கிகொன்றுள்ளது. முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 69வயதுடைய காளிக்குட்டி சங்கரப்பிள்ளை என்பரே உயிரிழந்துள்ளார். இதன்போது காட்டுயானை வீட்டின் பகுதிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் யானையின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்;டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போரதீவுப்பற்று பகுதியின் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த யானைகள் இன்று மக்கள் செறிந்துவாழும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

போதை பொருள் வாங்க வருவோரிடம் பணம் இல்லாத போது அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபரிகள் தொடர்பிலான இரகசிய தகவல் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்றமையை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை ,அவர்களிடம் போதைப்பொருளை வாங்க வருவோர் பண பற்றாக்குறை ஏற்பட்டால் , தமது கையடக்க தொலைபேசிகள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகாக வைத்து போதை பொருளை வாங்கி செல்வார்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக்க தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச…

Read More

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் அல்லது விவாதங்களைவிட நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்துக்குரியது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். தனக்கு வாக்குவாதம் செய்வதில் பிரச்சினை இல்லை என்றும் தெருவுக்கு வந்தால் ரத்தம் சிந்த நேரிடும் என்று சிலர் சொல்கிறார்கள், இரத்தம் சிந்துவதற்கு முதல் நீங்கள் வாழ வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த விவசாயிகளும் உழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பற்றி பேச வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் பேசுமாறு அதற்குதான் நாடாளுமன்றம் உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே…

Read More

யாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16) உயிரிழந்துள்ளது.

Read More