சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவை சென்றடைய சுமார் 21 நாட்கள் ஆகும் என்றும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Author: admin
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத் தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஜீலொங் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், மீகெரென் மற்றும் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளாசென் மற்றும் குக்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு…
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் பழம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த அப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். அப்பிள் விதைகளை நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே, பயிர்ச்செய்கையை முன்னெடுத்ததாகவும் இரண்டு ஏக்கரில் அறுவடை கிடைத்திருப்பதாகவும் விவசாயி லக்ஷ்மன் குமார தெரிவித்தார். இந்த விளைச்சலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்து, அவற்றை விநியோகிப்பதற்கு முடியுமென்றும் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் இதற்கான பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயி கையளித்த…
தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியை சேர்ந்த 60 வயதான சுலைமான். மனைவி செரீனா ஆகியோரின் மகனான 28 வயதான சகத். இவர் மனநலம் குன்றியவர். நேற்று காலை 10 மணிக்கு செரீனா வெளியே சென்ற போது வீட்டின் முன்னறையில் சகத் இருந்த நிலையில் பெட்ரோலுடன் அங்குச் சென்ற சுலைமான் திடீரென சகத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டுத் தப்பி ஓடி விட்டார். இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி சகத் அலறி துடித்தார். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற சுலைமானை திருச்சூர் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், தினம், தினம் மகன் படும் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததால் உயிரோடு எரித்துக்…
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 772ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 70 ஆயிரத்து 952ஆக அதிகரித்துள்ளது.
2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதிமன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று (19) கட்டளையிட்டது. கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது, மனித உரிமைகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான லிலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்று காணாமல் போயிருந்தனர். லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்விக்கும் நீதிப் பேரனை தொடர்பில் 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சாட்சியமாக ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கபபட்டது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்ப்பாணம் நீதவான்…
22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மகாபொல நிதியத்துடன் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக தற்போது மகாபொல விசேட புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தற்போது மாதாந்தம் 5,500 ரூபா வழங்கப்படுகின்றது. மகாபொல சாதாரண திட்டத்தினூடாக மாணவரொருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த கொடுப்பனவுகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.