போதைப் பொருட்களுடன் 27 வயது பெண் ஓருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். நேற்று கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்ற வீட்டை சுற்றி வளைத்தனர். இதன்போது திருமணமான 27 வயதுடைய பெண் ஒருவரை போதைப் போருட்களுடன் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணிடம் 11 கிரோமும் 50 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருளையும், 435 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றினர். மேலும் சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Author: admin
பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் தொடர்புகொள்ளும் நபர்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் ஒக்லண்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹெமில்டனில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55 போட்டிகளிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் 47ஆவது ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து 43 பேர் காயமடைந்தனர். 61 ஆயிரத்து 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 40 பேரைப் பற்றிய விவரங்கள் தெரிவில்லை. மேலும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 31 பள்ளி கட்டடங்களும், 124 வழிபாட்டுத் தலங்களும், 3 மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன.
பேஸ்புக் ஊடாக பெண் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில் இன்று (26) தெரிவித்தார். சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளதாகவும் அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கல்வி அமைச்சர், சாரி அணிவது அவசியம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சா.த பரீட்சையில் N. M. நப்றத் என்ற மாணவன் 9A சித்திகளைப்பெற்று முதன் முதலாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முதன்முதலாக க.பொ.த சா த பிரிவை ஆரம்பிப்பதில் அதிபர் றிசாத் அவர்கள் எடுத்த முயற்சியும், பல்வேறு சவால்களும் முக்கியமான விடயங்களாகும். அவரோடு இணைந்து இவ் வெற்றிக்காக அயராது உழைத்த, பாடசாலை ஆசிரியர்கள், STC உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். மேலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய அதிகமான மாணவர்கள் A,B,C.. சித்திகளையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுங்க அதிகாரிகள் குழு ஒன்றினால் கொள்கலன்களை விடுவிப்பதற்காக தரகு பணம் கோரப்பட்டுள்ள காரணத்தால் குறித்த அதிகாரிகள் கொள்கலன்களை விடுவிக்காமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா நிராகரித்த மேலும் பால் மா கொள்கலன்களை விடுவிப்பதில் சிக்கல் இருப்பின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினூடாக தீர்வு காண வேண்டும் என்றார்.