பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். எரிசக்தி துறையில் காணப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையினால், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயங்களை தெரிவித்தார்.
Author: admin
பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படைக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும். அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி: வெள்ளை முட்டை ரூ 43 பழுப்பு முட்டை ரூ 45
இலங்கையில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து நாற்பத்து மூவாயிரத்து அறுபத்தொரு திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், 1,62,628 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிகமான திருமணப் பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,591 ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில், 17,300 திருமணங்களும், குருநாகல் மாவட்டத்தில் 12, 409 திருமணங்களும், பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையான திருமணங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 899 ஆக காணப்படுகிறது. கண்டியில் 10, 467 திருமணங்களும், மாத்தளையில் 3, 712 திருமணங்களும், நுவரெலியாவில் 5, 362 திருமணங்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் 4,908 திருமணங்களும், கிளிநொச்சியில் 1,021 திருமணங்களும், மன்னாரில் 1,033 திருமணங்களும், வவுனியாவில் 1,455 திருமணங்களும், மட்டக்களப்பில் 5,553 திருமணங்களும், அம்பாறையில் 6,437 திருமணங்களும், திருகோணமலையில் 3,555 திருமணங்களும் பதிவாகியுள்ளன. அத்துடன் பதுளையில்…
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் ‘கொழும்பு சிட்டி செண்டருக்கு’ (CCC) அழைத்து வரப்பட்டுள்ளார். இவர் நடித்த ‘தி கேம்’ படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கைக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியின் பின்னரே அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறிய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் மீளாய்வுக் கூட்டத்தில் QR குறியீட்டு முறையின் அமுலாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் பொது மக்கள் அனுப்பும் முறைப்பாடுகளை காவல்துறை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முட்டை ஒன்றின் விலை திங்கட்கிழமை (22) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவை அறிவித்தது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர் சங்கம், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் ஏனைய உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கோழி தீவன தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்மூலம், ஒரு முட்டைக்கு 60 ரூபாய் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இரண்டு இளம் சிறுத்தைகள் ஹார்டன் சமவெளியில் சுற்றித் திரிவதை புகைப்படம் எடுத்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த சிறுத்தைகளின் நடத்தை ஹார்டன் சமவெளிக்கு வருபவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், மக்கள் கால் நடையாக பயணிக்க தடைசெய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காரணமாக சிறுத்தைகளால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார். சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலத்தில் இதுபோன்ற நடத்தை சாதாரணமானது என்றும், பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் சிரேஷ்ட நடிகர் ஜாக்சன் அந்தோனியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டார். ஜாக்சன் ஆண்டனி சமீபத்தில் தலைவாயில் நடந்த பெரும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேடையிலும், தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் தனது திறமைக்காக இலங்கையர்களின் கைதட்டலைப் பெற்றவர். ஜாக்சன் ஆண்டனி பதினாறு முறை சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். தனது விஜயத்தின் போது, வைத்தியசாலையில் உள்ள அந்தோணியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது வணக்கங்களை தெரிவித்ததுடன், நடிகரின் சிகிச்சை தொடர்பில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தமக்குத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். நடிகர் குணமடைய வேண்டி மத அனுசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிகழ்வுக்கு தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார். தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரையும் சந்தித்த ஜனாதிபதி, மருந்துகள் மற்றும் ஏனைய தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை தொடர்பில் கேட்டறிந்தார். பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வந்திருந்த மற்ற…