Author: admin

தெவிநுவர-சிம்ஹாசன வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக நேற்று (28) இரவு 8.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கந்தர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​ஹோட்டலுக்கு முன்பாக 3 T-56 தோட்டாக்கள் மற்றும் வெற்று தோட்டா உறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தாரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80வீத பாடசாலை வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பாடத்திட்டத்தை உள்ளடக்க பாடசாலைக்கு மாணவர்களை வரவழைக்க 80வீத வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் கொரோனா பரவலின்போதும் போராட்டங்களின்போதும் போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால் பாடசாலைக்கு வருவதற்கு சிரமப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு நிவாரணத் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சருக்குத் தெரிவிக்கிறோம். அதற்கு அவர் சாதகமாக பதில் அளிப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

களுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, கட்டுகுருந்த, நாகொட, பொம்புவல மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Read More

உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலையான ஹவாயின் மௌனா லோவா, கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்தது. ஆனால், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சாம்பல் விழும் அபாயம் குறித்து முன்னரே எச்சரிக்கப்பட்டனர். இந்தநிலையில், எரிமலையின் எச்சரிக்கை நிலை ‘ஆலோசனை’ என்பதிலிருந்து ‘எச்சரிக்கை’ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது மிக உயர்ந்த வகைப்பாடு ஆகும். அமெரிக்க புவியியல் சேவை, நிலைமை விரைவாக மாறக்கூடும் என்று கூறியுள்ளது. வெளியேற்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் இந்த கட்டத்தில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று அவசர அதிகாரிகள் கூறுகின்றனர். ஹவாய் எரிமலைகள் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள மௌனா லோவா, அமெரிக்க மாநிலத்தின் பெரிய தீவின் பாதியை உள்ளடக்கியது. எரிமலை கடல் மட்டத்திலிருந்து 13,679 அடி (4,169 மீ) உயரத்தில் உள்ளது மற்றும் 2,000 சதுர மைல்கள் (5,179 சதுர கிமீ) பரப்பளவில் பரவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பதிவான ஒரு டசனுக்கும் அதிகமான…

Read More

நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்தார். நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் அதிகளவானோர் தமிழகத்திற்கு சென்றுள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக சென்ற 303 இலங்கையர்களில் 302 பேர் வியட்நாமில் உள்ளனர். அதில் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டார். அதேபோன்று யுக்ரைனிலும் தமிழ் பேசும் 7 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் உள்ள குறித்த 303 பேரில் 85 பேர் மீள நாடு திரும்புவதற்கு இணங்கியுள்ளனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு சட்டவிரோத பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு தெளிவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். சட்டவிரோதமாக சென்றால் அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அறிவுறுத்தல் விடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர்…

Read More

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கு யோசனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கும் யோசனை ஆதரித்ததுடன் ஏற்றுமதிக்கான கஞ்சா சாகுபடியை மருத்துவ மூலிகையாக ஊக்குவிக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கஞ்சா சாகுபடிக்கான தடையை நீக்குவதற்கான அரசின் முன்மொழிவை பாராட்டிய அவர்கள், அதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

Read More

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளின்கனின் அழைப்பின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமெரிக்கா சென்றுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த விஜயத்தின்போது, அவர் ​​அமெரிக்க எய்ட் நிர்வாகி சமந்தா பவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 280,000இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 3.57 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று நாடு திரும்பியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாளை இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும் 945 கப்பல் பணியாளர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசியுடன் நேற்று (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து அரிசியை இறக்கும் பணி (28) நிறைவடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக சீனாவினால் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் இதுவரையில் இலங்கை மாணவர்களுக்கு 8,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More