பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சியின் சகோதரரும் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நிஹால் வெதராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் ஒன்பதாம் ஆம் திகதி இரு வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Author: admin
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் சுமார் 30 நாட்கள் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி இன்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்தில் தங்கியிருக்கும் கால அவகாசம் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான குறுகிய கால நுழைவு வீசா காலாவதியான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது. மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஊடகங்களுக்கு கூறியிருந்தார். தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் விளக்கம் இந்நிலையில், இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி,…
காலியில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், வாட்ஸ்எப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் மதகுரு என்ற போர்வையில் சிறுவர்களை ஈர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலி நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஒகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான அனைத்து நிலங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேசிய எரிபொருள் பாஸை வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக சில தவறான செய்திக் கட்டுரைகள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு (“NFP”) ICTA இன் தொழில்நுட்ப உதவியுடன், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மக்களுக்கு எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, பொருளாதார நெருக்கடியின் போது இறக்குமதிச் செலவுகளைக் குறைப்பதற்காக, குடிமக்களுக்கு எரிபொருளைப் பெறுவதற்கு வசதியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தீர்வை உறுதிசெய்யும் வகையில், குடிமக்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வசதியாக NFP தொடங்கப்பட்டது. NFP அமைப்பு, இதுவரை நாட்டில் அனுபவித்திராத நெருக்கடியை நிர்வகிக்க உதவுகிறது. மேலும், NFP அமைப்பு அமைச்சகம் மற்றும் அதன் பங்குதாரர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் எரிபொருள் விநியோக விநியோகச் சங்கிலியை மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிர்வகிக்க உதவுகிறது. Fuelpass.gov.lk இல்…
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரு பெண்களை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (11) கைது செய்துள்ளனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாணந்துறை பிரதேசத்தில் இரண்டு வர்த்தக நிலையங்களை நடத்திவருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜுலை மாதம் 14ம் திகதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் பயணித்திருந்தனர். சுமார் ஒரு மாத காலத்தை அண்மித்து, சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது. மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார். இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம்,…
தங்க நகை திருடனால் கஹந்தோட்டை பிரதேசத்தில் பல தடவைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர் என்பதோடு பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு சரக்குக் கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த சரக்குகள் நாளை (12) இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உதவியுடன் சரக்குகளுக்கான கொடுப்பனவுகள் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு,ஓக 11 பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராயரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேராயர் பங்குபற்றிவிருந்த அனைத்து உற்சவ நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன