இலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலிய கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட போது அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களே இன்று அவுஸ்ரேலிய கப்பல் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கை பங்காளிகளுடனான உறவை அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர்வாக மதிப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவர்…
Author: admin
எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியது. அனைத்து/பல்கட்சி அரசாங்கம் அல்லது வேலைத்திட்டத்திற்கான முன்னோக்கிய வழி குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் SJB தலைவர் சஜித் பிரேமதாச, கூட்டமைப்பின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் SJB நிர்வாகக் குழு ஆகியோர் கலந்துகொண்டனர். “2.90 நிமிட விவாதம் சாதகமாக இருந்தது. சஜித் பிரேமதாச “நேர்மறையான மனநிலையுடன்” தான் கூட்டத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்றத்தின் மூலம் நாம் அனைவரும் இணைந்து எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்,” என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் அவசரகாலச் சட்டத்தை நீக்கி, ‘அரகலயா’ கைதிகளை விடுவிக்க விரும்புவதாகவும், அதே நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுவதையும் தன்னிச்சையாக…
புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அமைப்புக்கான QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனினும் ஏற்கனவே QR முறையில் பதிவுசெய்த பயனர்களுக்கு இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டன. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33% ஆல் அதிகரித்து 590,260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் 101,777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதில் 98,124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். திணைக்கள வரலாற்றின் படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் 6,58,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 590,260 என்பது கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படும்…
QR குறியீட்டு முறைமையின் ஊடாக ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தமது சங்கமும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். பல தனியார் பஸ் சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால், பல பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (04) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும். இதேவேளை, இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,232 ஆகும்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மக்களுக்கு தேவையான எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முறையான சேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த போதே உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட இதனைக் குறிப்பிட்டார். விஜித் மல்லல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சீரற்ற காலநிலை காரணமாக 3,471 குடும்பங்களைச் சேர்ந்த 13,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 574 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,149 ஆக உள்ளது, மேலும் 141 வணிக நிறுவனங்களும் மழையினால் சேதமடைந்துள்ளன.
லிந்துலை, லோகி தோட்டப் பிரிவில் சிறுத்தை ஒன்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு தவறுதலாக வீட்டினுள் விழுந்துள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சமையலறை பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாகவும், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். சத்தத்தின் காரணத்தை ஆய்வு செய்யும் போது, சிறுத்தை தன்னை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவர் காயமின்றி தப்பியதாகவும் அவர் மேலும் கூறினார். பின்னர் வீட்டிற்குள் விலங்கு சிக்கியதும் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை குடும்பத்தினர் பலமாக மூடிவிட்டு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் விலங்கைப் பாதுகாப்பாகப் பிடித்து தமது காவலில் எடுத்துள்ளனர். நாய்களை வேட்டையாடும்போது சிறுத்தை தவறுதலாக வீட்டுக்குள் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படும் என முன்னதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்தார். எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.