16 – 20 வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய சட்ட திருத்தத்தின்படி, பாடசாலை மாணவர்களும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடாது என்றும் முறையான பயிற்சி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஆபத்தான வேலை வாய்ப்புகள் எழுபத்தி இரண்டு இருப்பதாகவும், அவற்றில் பணிபுரிய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுஎன்றும் தொழிற்துறை அமைச்சு கூறியுள்ளது. பகுதி நேர வேலைவாய்ப்பில், இ.பி.எஃப். மற்றும் ETF செலுத்தும் போது…
Author: admin
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற உள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 குறைநிரப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் காலை 9.30.மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும் நடத்தவும் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்பாவனையிலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் விரிவுப்படுத்த கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் புதன்கிழமை (10) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது பொது போக்குவரத்து சேவை தொடர்பில் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது பொது போக்குவரத்து சேவை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. எரிபொருள் பாவனையிலான பொது போக்குவரத்து சேவைக்கு பதிலாக,மின்சாரத்திலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் விரிவுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை…
பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு அமைய, பாண் இறாத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதா? என்ற கேள்வி உள்ளது. அத்துடன், கோதுமை மா, சீனி என்பனவற்றின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பணிஸ் விலை அதிகரிக்கப்பட்டதா, என்ற கேள்வியும் உள்ளது. எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகார சபையானது, நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்காக முன்னிலையாவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இதற்கு பதிலளிக்கும் வகையில், வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனி சங்கராத் தெரிவித்துள்ளார். இராஜதந்திர கடவுச்சீட்டின் கீழ், கோட்டாபய ராஜபக்சவை 90 நாட்கள் தங்கியிருக்கும் நோக்கில் உள்நுழைய அனுமதிப்பதில் தாய்லாந்திற்கு எந்தப் பிரச்சினையையும் தனி சங்கராத் குறிப்பிட்டுள்ளார். எனினும் கோட்டாய ராஜபக்ஷ எப்போது வருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி அன்று தாய்லாந்தின் பெங்கொக் நகருக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும்பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார். எனவே, மாகாண பேருந்துகளில் சோதனையிடுவதற்கு அனைத்து நடமாடும் சோதனை அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டுள்ள பல நடமாடும் சோதனை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அபராதம் விதிக்கப்பட்டு, சம்பவங்களில் ஈடுபட்ட சில பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிலான் மிரண்டா கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை (5) முதல், மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சுமார் 100 பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அண்மைய…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் புகலிடம் கோரவில்லை என்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராஜபக்சவின் வருகை தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மற்றவர்களின் QR குறியீடுகளை திருடுவதன் மூலம் கோட்டா முறையின் கீழ் எரிபொருள் பெறும் நபர்களை மோசடி செய்யும் சூழ்நிலையை குறைக்க தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) பணிப்பாளர் தசுன் ஹெகொட தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி பெறுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். உரிமையாளரைத் தவிர வேறு எவரும் QR குறியீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து அவர்களின் குறியீட்டை, பிறரால் பார்க்கப்பட வாய்ப்பிருந்தால், அதை மறைக்குமாறு ICTA இயக்குநர்,கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஒகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விருந்தளித்தார். இந்த கூட்டத்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
ஊவா – பரணகம வனப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக அகழ்வு செய்து கொண்டிருந்த 6 பேரை பண்டாரவளை தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். புதையல் வேட்டையாடுபவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆறு சந்தேக நபர்களை கைது செய்து, வன ஒதுக்கீட்டிற்குள் சோதனையைத் தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். சந்தேக நபர்கள் அவிசாவளை, மத்துகம, கொஸ்கம மற்றும் பொம்புருயெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.