காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 வயது மாணவனை தாக்கியதையடுத்து மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று(11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அதிபர் தலை மறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 10 வயது மாணவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றில் இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு 3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து வீடு சென்ற மாணவன் மீது தளும்புகளை கண்ட பெற்றோர் அவனிடம் விசாரித்ததையடுத்து தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து காயமடைந்த…
Author: admin
மகா பருவ பயிர்ச்செய்கைக்காக 100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த யூரியா உரம் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வருட மகா பருவத்தில் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த 1ம் திகதி நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன 3 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது. அத்துடன் காணாமல் போன மேலும் இரண்டு பேரை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலியில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், வாட்ஸ்எப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் மதகுரு என்ற போர்வையில் சிறுவர்களை ஈர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலி நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஒகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை பாடசாலையின் நல்ல தம்பி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு S.கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபரும், ஒழுக்காற்றுக் குழுவின் செயலாளருமான திரு ஜீ.அல்பரட் கரனின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். நிருபர் எஸ்.எம்.எம்.றம்ஸான்
சீனாவின் இராணுவ கப்பல்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றவேண்டும். அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த செய்தியை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கடற்படை கப்பல் ஆயுதமற்ற நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பயணப் பாதை தெரியவில்லை. எனினும் தற்போது கப்பலை எப்போது நிறுத்துவது என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது கடந்த ஒரு வாரமாக, 730 அடி நீளமுள்ள இந்த சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல், காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மைய ஆண்டுகளில், வோஷிங்டனும் புது டெல்லியும் சீனாவை…
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து இதற்கான நியமனக்கடிதத்தினை திங்கட்கிழமை(8) பெற்றுக்கொண்டார். புதிதாக நியமனம் பெற்றுள்ள கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE)இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பல வருட கால அனுபவத்தினை பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் என்பதுடன் ஏலவே சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கதாகும். அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை சேர்ந்த எம்.எஸ் சஹதுல் நஜீம் விஞ்ஞான பட்டதாரி என்பதுடன் விஞ்ஞான முதுமாணி கல்வி முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி என்பதுடன் 15 வருட கல்வி நிர்வாக சேவை…
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தொடக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருடன் ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார். மேலும் அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய ஆசன உரையை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் ஜனாதிபதியிடம் முஸ்லிங்கள் சார்பில் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சம்மாந்துறை மற்றும் மூதூர் போன்ற உள்ளுராட்சி மன்றங்களின் தரமுயர்த்தல் உட்பட ஏனைய…
பிஸ்கட் நிறுவனங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து நுகர்வோர் சேவை அதிகார சபையின் அங்கீகாரத்தின் கீழ் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுடன் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் நாளை, நாளை மறுதினம் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.