இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு பயணத்தடை டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
Author: admin
தமிழகத்தின் மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 35 வயதான செந்தில்குமார், என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில். இவருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயதான வைஷ்ணவிக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27 ஆம் திகதி மகளை பாடசாலையில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை வாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றில்…
வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து ஒன்று டிப்பருடன் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில், 6 பேர் மாங்குளம் மற்றும் 4 பேர் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று (வியாழக்கிழமை) நினைவுக்கூரப்படவுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயன்ற 34 பேருடன் பயணித்த படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில், டோவர் ஜலசந்தியில் இதுவரை இல்லாத மிக மோசமான புலம்பெயர்ந்தோர் பேரழிவதாக கருதப்படும் இந்த விபத்தில், கருவில் இருந்த குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அரங்கேறி அடுத்த நாட்களில் பொதுமக்களின் கூக்குரல் எழுந்தது மற்றும் இரு தரப்பிலிருந்தும் அரசியல்வாதிகள் மக்கள் கடத்தல்காரர்களைக் கண்டித்து தீர்வுகளைக் கோரினர். ஆனால், அந்த 31 பேர் நீரில் மூழ்கி 365 நாட்களில், கிட்டத்தட்ட 44,000 பேர் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த தவிர்க்கக்கூடிய மரணங்களிலிருந்து அரசாங்கம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என சோகத்தின் ஓராண்டு ஆண்டு நினைவு நாளில் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அகதிகள் தொண்டு…
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 28,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று…
சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அரசு ஊழியர்கள் சாதாரண உடையில் வேலைக்கு வர வாய்ப்பைப் பயன்படுத்த முடியாவிட்டால், அது பொது முடிவாக மாற வேண்டும். வெவ்வேறு நபர்களால் ஆடைகளைப் பற்றி முடிவெடுக்க முடியாது. எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெளிவாக கூறுகிறோம். இதை மாற்ற வழியில்லை. வெளிப்படையாக இப்போது சேலை அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவித நிர்ப்பந்தம் இருந்தால், அவர்களுக்கு ஒரே மாதிரியான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் விரும்பி புடவை அணிவார்கள். அது…
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வருடம் 517,496 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் தம்மைவெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை, அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர். சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் ,…
மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர் மண்டை தீவு பகுதியிலுள்ள அட்டைப் பண்ணையில் கடந்த காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார். இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.