Author: admin

ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையினை வந்தடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 04ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும். உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் நடக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

Read More

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், 38 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் புத்தகப்பைகள் ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினை தொடர்ந்து காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது. இதனால் காலணிகள் மற்றும் பைகளின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கம்பளை தொலுவவில் 15,000 குடும்பங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த நீரைக் குடித்த 14 வயதுடைய பாடசாலை மாணவியும் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பளை தொலுவ பிரதேச மக்கள் பயன்படுத்தும் 31 நீர் ஆதாரங்களிலும் மலம் கலந்துள்ளதாக கம்பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், திம்புலாகல பிரதேசத்தில் உள்ள சிறிபுர, நுவரகல மற்றும் வெஹெரகல ஆகிய கிராமங்களுக்கு நீர் வழங்கும் குடிநீர் தாங்கிகளில் காலாவதியான குளோரின் கலக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 7,000 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உள்ளூராட்சி சபையினால் வழங்கப்படும் நீரைப் பருகுவதைத் தவிர்த்து முடிந்தவரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகுமாறும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் போகம்பர சிறைச்சாலையின் கழிவுகள் மகாவலிக்குள் கொட்டப்படுவதாகவும், மகாவலியில் உள்ள நீர் பாரியளவில் மாசடைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக…

Read More

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலையை அமைச்சர் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்பித்தார். இதன்படி, தற்போதுள்ள அலகு 0-30 இற்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய அலகின் விலை ரூ.25 ஆக திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார். மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 0-30 அலகுகள் பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகளைப் பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.…

Read More

நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பின்னர், இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More