சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒகஸ்ட் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (13) நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Author: admin
75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியதாக, அந்த சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் அண்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், தமது சங்கத்திற்கு பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்திய அரசாங்கம் இந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில் புதிய டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கடல்சார் கண்காணிப்பு விமானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடற்படைக்கு உள்வாங்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியது. அதன் வருகையை ஏன் எதிர்த்தது என்பதற்கான “உறுதியான காரணங்களை” இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ‘யுவான் வாங் 5’ இப்போது திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஓகஸ்ட் 16ஆம் திகதியன்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும். இது முதலில் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரவிருந்தது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியதை அடுத்து இது தாமதமானது. இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் கப்பல் திடீரென தடம் மாறியது. எனினும், தற்போது மீண்டும் ஹம்பாந்தோட்டை நோக்கிச் பயணிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான பிரதம வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி தெரிவித்துள்ளார். பொரளை புனித லூக்கா தேவாலயத்தில் இன்று (12) ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பொரளை புனித லூக்கா தேவாலயத்தின் அருட்தந்தை கிருஷாந்த மென்டிஸின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று (12) முதல் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து தரப்பினருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது…
இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,674 ஆகும்.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபயபய ராஜபக்ச, பாங்காக்கின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருவதாக பாங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டான் மியூயாங் சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வாடகை விமானத்தில் ராஜபக்சே மேலும் மூன்று பேருடன் வந்தார். அங்கு வந்த அவரை தாய்லாந்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ஹோட்டலின் இருப்பிடம் வெளியிடப்படாத நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவுப் பணியகத்தைச் சேர்ந்த சிவில் உடையில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் தலைவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஹோட்டலிலேயே தங்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். பல தசாப்தங்களில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி குறித்து பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜபக்சே இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூலை 14 அன்று தப்பிச் சென்றார். பிறகு அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா…
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஒகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 7,920 பாடசாலைகளில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, இனி ஒரு சாதாரண கடிதம் ரூ. 50/- , மற்றும் பதிவுத் தபால் ரூ. 60/- ஆகும். தற்போதைய கட்டண விபரங்களடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்று, அங்கிருந்து காணாமல் போன இலங்கை வீரர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார். விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பத்து விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதை ஒப்புக்கொண்டார், மேலும் இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தப்பியோடியவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு விசா வழங்கப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்வதில் இங்கிலாந்து காவல்துறை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, இருப்பினும், அவர்கள் இலங்கை திரும்பியதும், பயனுள்ள சட்டங்களின் கீழ் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிரிசூரிய கூறினார்.