மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Author: admin
மே 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்கவுக்குச் சொந்தமான பாணந்துறை வீடு, தனியார் சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை ஹொரணை பொலிஸார் நேற்று (23) கைது செய்துள்ளனர். இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார். முன்னோடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச துறை ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக இன்றும் நாளையும்(24) நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்கான உரிய திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. r
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடு திரும்ப முடியாமற்போயுள்ளதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதென மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எந்தவொரு பிரஜையும் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பை வழங்கி அவர் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்களும் மீண்டும் நாடு திரும்புவதற்கு போதுமானளவு பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை குறைக்க கோழி வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் என அவர் கூறியுள்ளார். கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனிடையே, முட்டைக்கான உற்பத்திச் செலவை விட குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்வதில் சிரமம் காணப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
120,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்னும் 40 நாட்களுக்குள் முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் இல்லாததால் நாடு மிகவும் பின் நோக்கி தள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகில் அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்.