இலங்கையில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டைக்கு சீனா இராணுவக் கப்பலை அனுப்புகிறது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக வொஸ்ப் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வரும் யுவான் வாங் 5 என்ற கப்பலை, இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு ஆய்வுக் கப்பல் என்று சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் விபரிக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வர்த்தக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்துவதே சீனாவின் இலக்கு என்று முன்னாள் இலங்கை இராஜதந்திரி தயான் ஜயதிலக வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவதற்கு தனது ஒப்புதலை வழங்கியதாக நம்பப்படுகிறது. இந்தநிலையில் பெரிய எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின்னர், அவருக்குப் பதிலாக வந்த புதிய அரசாங்கம் அந்த…
Author: admin
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருத்துவ வதிவிட விசாவில் இலங்கை வந்த பிரித்தானிய பெண் தொடர்பிலேயே இந்த விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில், அவர் காலி முகத்திடல் போராட்டத்தை ஆதரிப்பதாக சமூக ஊடகங்களில் பல காணொளிகளை பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கை மற்றும் அதன் பாதுகாப்புப் படையினர் குறித்து தவறான பிரசாரங்களைச் செய்து நாட்டுக்கு களங்கம் விளைக்கும் வகையில் செயற்பட்டதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இப்பெண் தமது விசா காலத்தை நீடித்து நாட்டில் தங்கியிருந்ததாகவும், இந்தப் பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு குறித்த பிரித்தானிய பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை-டபிள்யு.ஏ.டி.சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று (02) அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாடசாலை நடத்தும் விதம் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிகாட்டல்கள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார். இதேவேளை, இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ள இருவேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குளியாப்பிட்டிய, பிடதெனிய பிரதேசத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிடதெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அதன் போது நண்பரின் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பிறகு, நண்பரும் அவரது கூட்டாளிகளும் பாதிக்கப்பட்டவரை மரக்…
தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே அந்த மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர். கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டும் முகம் மறைக்கப்பட்டும் மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்த அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் மாவட்டத்தின் ரொட்டாவ சீப்புக்குளத்தில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு சிறுமியே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். இச்சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, வயல்வெளியில் உள்ள மரம் ஒன்றில் இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் தகவல் கிடைத்ததனையடுத்து கல்லஞ்சிய பொலிஸ் பொறுப்பதிகாரி உட்படலானோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டனர். சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது. ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேக நபர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்பதுடன் குருநாகலில் வெல்லவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மேலும் இரு நண்பர்களுடன் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன் பின்னர், ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த பீர் போத்தலைக் கைப்பற்றிய குழுவினர், அந்த வளாகத்தில் இருந்த பீர் குவளைகளை பயன்படுத்தி மது அருந்தினர். சந்தேக நபர் பீர் குவளையை நினைவுப் பொருளாக மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் ஜனாதிபதியின் வீட்டில் தனது நண்பர்களுடன் பீர் குவளையுடன் இருந்த புகைப்படத்தை தனது தனிப்பட்ட…
பெரும் போகத்தில் 60,000 ஹெக்டெயர் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படும் சோளம் பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி இல்லாததாலும், சோளம் விளையும் நாடுகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யாததாலும் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால், எமது நாட்டுக்குத் தேவையான சோளத்தை பயிரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. பெரும் போகத்தில் சோளச் செய்கைக்குத் தேவையான முழு விதைகளையும் வழங்க விவசாய விதை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
17 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாட களமிறங்கும் இங்கிலாந்து அணியின் ஆண்களுக்கான T20I இன் கராச்சி மற்றும் லாஹுர் பிரவேசத் திட்டம்: