வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர சட்டத்தரணிகள் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2017 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது, முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் ஆஜராகாமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் லஹிரு வீரசேகரவிற்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாமல், கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புரட்சிகர மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Author: admin
கொரோனா தொற்று உறுதியான மேலும் 114 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 669,581ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 6 பேர் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது கபில நிற முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (24) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,674 ஆகும்.
இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள ´டைல்ஸ்´ ( தரை ஓடுகள் ) உட்பட கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பல வகையான மூலப்பொருட்கள் மற்றும் வாகனங்களை நிபந்தனைக்குட்பட்டு இறக்குமதி செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபை திட்டங்கள் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட Condominium திட்டங்கள், கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ஹோட்டல் திட்டங்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்களுக்காக குறித்த இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மீள் விற்பனை நோக்கத்திற்காக இது தொடர்பான சாதனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக் கூடாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கொடுப்பனவு 180 நாட்களுக்குள் கடன் கடிதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர், திறைச்சேரி செயலர், நிதியமைச்சர் ஆகியோரின் அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளடங்குகின்றன.
நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் சிங்கமலை சுரங்கத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது. உயிரிழந்தவரின் சட்டை பையில் பணம் மத்திரமே இருந்துள்ளதாகவும் சடலம் தற்போது ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான முதலாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறாத சுமார் 60 இலட்சம் பேர் இன்னும் நாட்டில் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சமித்த கினிகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கொரோனா தொற்று அபாயத்தை கருத்திற்கொண்டு பெற வேண்டிய தடுப்பூசிகளை உடனடியாக எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 23ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 305 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்வதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்தது. குறித்த தடை நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த 23 ஆம் திகதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட, செப்டெம்பர் 14க்கு முன்னர் நாட்டை வந்தடையவுள்ள பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது மேலும் கட்டுப்படுத்தப்படும் பொருட்களில் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் ஆகியவை அடங்கும். இதேவேளை, அண்மையில் விதிக்கப்பட்ட இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் கையடக்கத் தொலைபேசி பெட்டரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி பெட்டரிகளின் விலையும் அதிகரிக்கும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த்தை தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகளை இலகுபடுத்தியுள்ளது. சுவிஸ் அரசாங்கத்தின் இந்த்த் தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது. சுவிட்சர்லாந்து எமக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸ்டர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த பயண இடமாக பார்ப்பதாக இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்தார். இதன் மூலம் சுவிட்ஸர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் விஜேதுங்க சுட்டிக்காட்டினார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது குடிமக்களுக்கு பரிந்துரை செய்திருந்த்து. அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. இலங்கைக்கான…