இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், ‘கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
Author: admin
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ரஞ்ஜன் ராமநாயக்க இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடிதத்தின் ஊடாக நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியிருந்தார். இந்தநிலையில், ஜனாதிபதியின் அனுமதியின் கீழ், பொது மன்னிப்பு ஆவணத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவிக்கின்றார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட காஷ்யப தேரர் உள்ளிட்ட இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான சட்டப் பின்னணியை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் விசேட மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் இத்திட்டத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவரிடம் குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்கா உதவி இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதே அமெரிக்காவின் கடமை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டோக்கியோ தயாராக உள்ளது. எனினும் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதனை தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் பட்சத்தில் சீனாவுடனான அத்தகைய சந்திப்பிற்கு ஜப்பான் தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கோரும் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்…
இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய (பண)மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்று பாக்சி கூறியுள்ளார். இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா இன்னும் உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அல்லது அங்கு செல்ல நினைப்பவர்களுக்கும் பொதுவான வழிகாட்டுதலாகவே இந்த எச்சரிக்கை இருக்கும் என்று பாக்சி குறிப்பிட்டார். இந்தியாவுக்கு வெளியே உள்ள…
உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்களின் பட்டியலின் முதல் இடத்தை உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். 14 மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 41 வயதான ஃபெடரர், முழங்காலில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்த பின்னர் கடந்த ஆண்டு விம்பிள்டனில் இருந்து போட்டிகளில் பங்கேற்கவில்லை. 20 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அவர் கடந்த 12 மாதங்களில் 90 மில்லியன் டொலர்களை ஊதியமாக பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜப்பானின் நவோமி ஒசாகா, கடந்த ஆண்டில் சுமார் 56.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரே அதிக ஊதியம் பெறும் பெண் டென்னிஸ் வீராங்கனை ஆவார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு 35.1 மில்லியன் அமெரிக்க…
இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் பகுதிகளை பொறுத்தவரையில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும். காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீற்றர் வரையாக இருக்கும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர்…
தென் மாகாணப் பாடசாலைகளில் பட்டதாரிகள் 19 பேர் துப்பரவுத் தொழிலாளர்களாக கடமைபுரிவதாக தென் மாகாணப் கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்துள்ளார். இவர்கள் அடங்கலாக 68 பட்டதாரிகள் பாடசாலைகளில் வாசிகசாலை உதவியாளர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவை தரம் 8 சித்தி பெற்றவர்களுக்கான பதவிகள் என்றும் அவற்றில் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். துப்பரவுத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களை வாசிக சாலை மற்றும் ஆய்வுகூட உதவியாளர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.