அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து அனுப்பும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் வழங்குவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடமை கடிதங்களுக்கும் பதில் அனுப்பும் போது சம்பந்தப்பட்ட கடிதத்தின் கையொப்பத்திற்கு கீழே பொறுப்பான பணியாளர் அதிகாரியின் நேரடி தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Author: admin
ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசேட உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கொள்கையின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இன்று இந்தக் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் அவர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமன, கே.பி.எஸ் குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, மருத்துவர் உபுல் கலப்பத்தி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமதனியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட அல்லது இலத்திரனியல் பற்றுச்சீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், பற்றுச்சீட்டின் பிரதியொன்றை விற்பனையாளரிடம் வைத்திருக்க வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தன்னால் அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றின் முதல் மைல் கல்லை விரைவில் அடைய முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரேஸிலின் அமேசன் காட்டில், கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மரணமடைந்துள்ளார். அவா்களது கூட்டத்தில் கடைசி நபரான அந்த ஆதிவாசியின் காட்டு வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் பிரேஸில் அரசு தொடா்ந்து கண்காணித்து வந்தது. அவா் ‘உலகின் மிகத் தனிமையான நபா்’ என்று அழைக்கப்பட்டு வந்தாா். இந்த நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் தனது இருப்பிடத்தில் இறந்து கிடந்ததாகவும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அது இயற்கை மரணமாகவே கருதப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சுமாா் 60 வயது இருக்கலாம் என்று கூறப்படும் அவரது உடல், தற்போது உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Ameen Zaky வின் Facebook பதிவில் இருந்து அக்கரைப்பற்றில் நடந்த மனதை நொறுக்கிய பிந்திய ஜனாஸா தகவல். நாய்க்கடிக்கு இலக்கான (இரண்டரை வயதுடைய) சின்னஞ்சிறு குழந்தையின் உயிர்… கடந்த 2022-08-26 வெள்ளி கிழமை அன்று பிரிந்தது (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்) கடந்த மாதம் (2022-07-13) அன்று அக்கரைப்பற்று ஐனா பீச் பின்னால் உள்ள வீட்டில் திருமண நிகழ்வு இடம்பெற்றது… அந்த திருமண நிகழ்வின் போது இந்த குறித்த குழந்தை விளையாடிக்கொண்டு இருந்த போது அவ்விடத்தில் நின்ற நாய் பிள்ளையின் மேல் பாய்ந்துள்ளது. அதை கண்ட ஒரு பெண் கதிரையால் நாயை தாக்கி விரட்டியடிததின் பின் பிள்ளையின் நெற்றியில் காயம் ஏற்பட்ட இருப்பதை கண்டு. அ.பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது காயம் நாய் கடித்ததா இல்லை நாயை தாக்கும் போது கதிரை பட்டு காயம் எற்பட்டதா எனும் சந்தேகம் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வைத்தியர்கள் பெற்றோரிடம் கூறி உள்ளார்கள் நாய்…
கல்யாணம் வேண்டாம் போங்கடா… மணக்கோலத்தில் ஓடிய மாப்பிள்ளை… துரத்தி சென்று பிடித்த மணப்பெண்
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மற்றும் மஹரகம மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20000 ரூபாவுக்கு மேலதிகமாக 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு சுமார் 1.1 பில்லியன் டொலர்களை விடுவித்தது, அதன் ஏழாவது மற்றும் எட்டாவது மதிப்பாய்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கை போன்ற இயல்புநிலை நெருக்கடியைத் தவிர்க்க உதவுகிறது. ஜூன் 2023 இறுதி வரை திட்டத்தை ஒரு வருடம் நீட்டிக்கவும், மொத்த நிதியுதவியை சுமார் $940 மில்லியன் அதிகரிக்கவும் IMF ஒப்புக்கொண்டது. இந்த நிதியின் வெளியீடு, திட்டத்தின் கீழ் வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடன் வழங்குநரிடமிருந்து நாட்டிற்கான மொத்த ஆதரவை $6.5bn ஆகக் கொண்டு வரும். உலகளவில் உயர்ந்து வரும் விலைகள் மற்றும் பாகிஸ்தானின் அரசாங்கத்தின் தாமதமான கொள்கை நடவடிக்கை ஆகியவை நாட்டின் நிதிநிலையை மோசமாக்கியது, இது குறிப்பிடத்தக்க மாற்று விகித தேய்மானம், பணவீக்கம் மற்றும் அதன் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் அரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. ஒரு பலவீனமான பொருளாதாரம் இந்த ஆண்டு எரிபொருள் விலையை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது மற்றும் நாடு இப்போது வெள்ளத்தால்…