கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலையின் பாடசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப் பட்ட ஊரின் தனவந்தர்களின் உதவியினால் பாடசாலையில் சேதமடைந்து காணப்பட்ட தளபாடங்களை மீண்டும் சீரமைத்து புதிய தளபாடமாக மாற்றி அதனைபாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று(25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்,பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எல்.எல்.ஏ ஹமீட், பழைய மாணவ சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரிமற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். கல்முனை அல் பஹ்ரியா பாடசாலையின் பெளதீகவள அபிவிருத்தி நடவடிக்கைகளின் அதிபரோடு இணைந்து பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Author: admin
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி Tw சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர். அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை…
முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதனை குறைக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்த முடியும் என்றும் முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த தாம் ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என்றும் எல்லை நிர்ணயத்தை முன்னெடுக்காமல் தேர்தலை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் 106 ஓட்டங்களையும் குர்பாஸ் 53 ஓட்டங்களையும் ரஹமத் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் ராஜித, தனஞ்சய லக்ஷான், லஹிரு குமார மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய…
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 8 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆரம்ப பிரிவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து வைத்து மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவன் மயக்க முற்றுள்ளார். பின்னர் அந்த மாணவருடன் சென்ற மாணவர்கள் கதவை உதைத்து உள்ளே சென்று குறித்த மாணவனை மீட்டதுடன், ஆசிரியையை அங்கு அடைத்துவிட்டு முதலுதவி செய்ததுடன் பாடசாலை அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும், மாணவன் சிகிச்சைக்குட்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தந்தையை…
கிராண்ட்பாஸ், சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1/2 வயதுடைய குழந்தையின் மரணம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மாமா ஜன்னல் வழியாக குழந்தையை வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) டெலிகாம் நிறுவனத்தால் இன்று நாடு பூரா நடாத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து இன்று கல்முனை டெலிகாம் காரியாலயத்திற்கு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தனிப்பட்ட ஒருவரின் இலாபத்திற்காக தடை செய்யபட்ட பொருள் என்று அறிந்தும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மாபெரும் குற்றமாகும். கடுமையான தண்டனைகள் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகளை முற்றிலும் இல்லாமொழிக்க முடியும். பாதுகாப்பு பொது செயலாளரின் இந்த அறிவிப்பானது வரவேற்தக்க விடயமாகும். நாட்டில் 22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வாறான கடுமையான தண்டனைகள் ஊடவே இளைய சமுதாயத்தினரை சரியான…
கொழும்பு – கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. போதைப்பொருளுக்கு அடிமையான அக்குழந்தையின் மாமாவால் குறித்த குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.