தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தாய் மொழியில் படித்தால்தான் அறிவை வளர்க்க முடியும் என்றும் புத்தக அறிவு மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டுள்ளார். திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும் என்றும் அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். திருக்குறளை அனைத்து மாநிலங்களில் பாடத்திட்டமாக மாற்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.
Author: admin
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி ஜப்பானில் நடைபெற இருக்கும் ஜப்பான் டோக்கியோ சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் பிரான்சியா லட்சுமணர் ஜப்பான் பயணமானார். லண்டனில் வசிக்கும் தற்போதைய ஐக்கிய இராச்சிய உலக அழகியும் இலட்சுமணர் சாந்தி தம்பதியரின் புதல்வியுமான இவன்ஜலின், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியை பூர்வீகமாக கொண்டவர். ஐக்கிய இராச்சியத்தில் உலக அழகு ராணியாக 2021 22 இல் தெரிவாகிய இவன்ஜலின் அதுக்கு முன்பு பெரிய பிரித்தானியாவில் உலக இளம் அழகியாக 2017 18 இல் தெரிவானவர். ஜப்பானில் நடைபெற இருக்கும் அறுபதாவது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவதற்கு கடந்த திங்களன்று (28) லண்டனில் இருந்து அவர் ஜப்பான் பயணமானார் . பிரித்தானியாவில் பல தர்மஸ்தாபனங்களை நடத்தி வரும் இவர், அதனூடாக மட்டக்களப்பு பகுதிகளிலே வீடற்ற வர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்ததோடு, காலி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி…
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. யாழ்.பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெயை பெற்றுக்கொண்டனர். இதேவேளை அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய வேலைத்திட்டத்தின் கீழ், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பௌசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ படிப்பை முடிக்கவே மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் ரூபாய் செலவழிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவ்வாறு பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவிகளே அதிகம் என தெரிவித்தார். எனவே எவ்வாறான அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினை பாதிக்கும் எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட…
பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நடிகை சமந்தா உயர் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது. தென்கொரியாவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் அவர் விஜய் தேவரகொண்டா உடன் நடிக்கும் ’குஷி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமாகி மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என…
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணொருவரின் கைப்பை மற்றும் 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வரும் பெண்களை இலக்கு வைத்து திருட்டு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்கள் தமது மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழ் தமது உடமைகளை வைத்து விட்டு செல்வதனை அவதானிக்கும் கும்பல் அவற்றை திருடி வருகிறது. எனவே தமது உடைமைகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.