குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார வறுமையை சமாளிக்கும் விதமாக குடும்பத்தின் பெண் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ‘இலங்கை சிக்கலான அவசர தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை’ தெரிவிக்கின்றது. “18 வயதுக்கு முன்னதாகவே பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் அபாயம் அதிகம் என அனைத்து குடும்பங்களிலும் 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்” என ஆய்வுக் குழுவைச் சேர்ந்த சிங்ஹ விக்ரமசேகர தெரிவித்துள்ளார். “பணவீக்கத்தின் உச்ச நிலைமையை நாம் காண்கிறோம்” என கொழும்பில் கலந்துரையாடலின்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்ததாக, ப்ளூம்பெர்க் இணையத்தளம் ஒக்டோபர் 21 செய்தி வெளியிட்டது. அதாவது இலங்கையின் பணவீக்கம் 70%ஐ எட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய பணவீக்கச் சூழல் மக்களின் நுகர்வு முறைகளை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான உதாரணத்தை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இலங்கையில் பாதி குடும்பங்கள் விலை ஏற்றத்துடன் இறைச்சி மற்றும் மீன் உட்கொள்ளலை குறைத்துள்ளதுடன்,…
Author: admin
அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு, எதிர்வரும் 28ம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றிற்கான கொடுப்பனவு திட்த்தின் கீழ் பயனடையும் அனைத்து குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் மற்றும் உதவித் தொகையை எதிர்பார்த்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. உரிய விண்ணப்பப் படிவத்தை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து ( www.wbb.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 2151 481 அல்லது 1919 என்ற தொலைபேசி…
தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதற்கமைய, 22 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (26) 156,000 ரூபாவாக குறைந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும், செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் இரண்டு இலட்சம் ரூபாவாகவும் இன்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் காணப்படும் கோதுமை மா பாவனைக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் நேற்று (25) கொழும்பில் தெரிவித்தார். கோதுமை மாவின் தற்போதைய தரநிலை குறித்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கோதுமை மா மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய மாவு தொடர்பில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் உணவக உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல பொது அமைப்புகளும் கலந்து கொண்டன.
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பாடசாலை செயற்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை அங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார். தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து நடந்த போது பாடசாலை தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிருபே, மாணவிகளின் விடுதிக்கு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த விடுதியில் ஜன்னல்கள் திறக்க முடியாத அளவிற்கு வலுவாக…
வடக்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது 26 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக சர்வதேச விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. டோலோரஸுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம், தெற்கே 330km தொலைவில் உள்ள தலைநகர் மணிலா வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ககாயன் மாகாணத்தில் குறைந்தது இரண்டு நகரங்களில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை பல பாலங்கள் மற்றும் வீதிகளும் சேதமடைந்துள்ளன.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஹஷான் திலகரத்ன இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 1ஆம் திகதி முதல் ஹஷான் திலகரத்ன, பொறுப்பேற்கவுள்ளார்.
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்று அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இதுவரை 15 மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்காததால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகங்களில் அவற்றை வாங்க வேண்டியுள்ளது. அரச மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மருந்துகளின் விலையை அவ்வப்போது உயர்த்துவதால், மருந்துகளின் விலை கிட்டத்தட்ட 300 வீதத்தினால் அதிகரித்துள்ளன. இதன்படி, புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குப்பியின் போன்ற மருந்துகளின் விலை 300,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜூன கார்கே இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் பங்கேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றார். பதிவான 9,385 வாக்குகளில் கார்கேவுக்கு 7,897 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூருக்கு 1,072 வாக்குக்களும் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத முதல் தலைவர் என்ற புதிய சரித்திரத்தை கார்கே படைத்துள்ளார்.
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நவியோஸ் ஜாஸ்மின் கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த அரிசியின் வருகையை அடுத்து, சீனா இலங்கைக்கு வழங்கிய மொத்த உதவித்தொகை 6,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.