Author: admin

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று(27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்விக் கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பட்டதாரிகள் நியமனத்தின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார். இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்களினால்…

Read More

மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம ஆகிய பகுதிகளில் கடல் நீர் அடிக்கடி பச்சை நிறமாக மாறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கடும் பச்சை நிறத்தில் இருக்கும் கடல் நீரில் இறங்க பலர் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து நாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ​​உரிய கடல் நீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்றார். இது இயற்கையான பாசி நிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

நடப்பு ஆண்டின் 3ஆவது காலாண்டில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவில் 4 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 4-வது காலாண்டிலும் மெட்டா வருவாய் இழப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வருவாயில் குறுகிய கால சவால்களை எதிர்கொள்ளும் அதே நேரம், வலுவான வருவாய் வளர்ச்சிக்கு திரும்புவோம் என மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூகுள் மற்றும் யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் ஸ்னாப் நிறுவனங்களும் 3-வது காலாண்டில் இழப்புகளை சந்தித்துள்ளன.

Read More

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, பாண் ஒன்றினுள் மூன்று குண்டு ஊசிகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

Read More

தனியார் பஸ் உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரத்தினபுரி டிப்போவின் நடத்துனர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் இன்னும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என பிரதம செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த லியனகே, தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியுள்ளார். சம்பவம் தொடர்பில் இரத்தினபரி டிப்போவில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

Read More

போதிய அளவில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா கிடைக்குமாயின், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதும், அதை கொள்வனவு செய்வதற்கு பேக்கரிகளுக்கு 300 ரூபாய் வரை செலவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா போதிய அளவு கிடைக்கப்பபெறும் பட்சத்தில் அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றார். பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை இப்போதே அறிவிக்க முடியாது என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அது குறித்து அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Read More

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர். வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு அறிவித்தல் வழங்க பின்வரும் விஷேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விசாரணையில் அந்தந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கடவுச்சீட்டு பெறும் போது வழங்கிய தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேறு நாட்டின் குடியுரிமை உள்ளவரா என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்த நாட்டில் கடவுச்சீட்டு பெறும் போது அதனை…

Read More

வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் மதுவுக்கு அடிமையான நிலையில், மது போதையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மரணமாகியுள்ள சம்பவமொன்று பதுளை வைக்கும்பர பெருந்தோட்டத்தில், 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விருவருக்கும் மகளும், மகனும் உள்ளனர். திருமணம் முடித்து குடும்பத்தைவிட்டு பிரித்து மகன் வாழ்கின்றார். மத்திய கிழக்கு நாடொன்றில் மகள் தொழில் செய்து வருகின்றார். இவர் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தில் இவ்விருவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இவ்விருவரும் கூடுதலாக மது அருந்தியதால் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனர். அயலவர்கள் இவர்களை படல்கும்புரை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Read More

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டை வந்தடைந்துள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த நிலக்கரியை இறக்கும் பணி நேற்று (26) ஆரம்பமாகியதாக லங்கா நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 4 நிலக்கரி கப்பல்கள் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வரவுள்ளன. புதிய ஏற்றுமதியின் மூலம் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தடையின்றி மேற்கொள்ள முடியும் என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More