Author: admin

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு கூட பணம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த இவ்வாறான கடுமையான தீர்மானங்கள் சரியே என மக்கள் இந்த வருட இறுதியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More

பிரான்ஸின் பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் பார்வையாளர்கள் முன்னிலையில் சுறா தாக்கி, சுற்றுலாப் பயணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 59 வயதான அவுஸ்ரேலிய சுற்றுலா பயணி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நௌமியாவில் உள்ள பிரபலமான கடற்கரையில், கரையிலிருந்து சுமார் 150 மீ (500 அடி) நீந்திக் கொண்டிருந்த போது, சுறா தாக்கி, அவர் உயிரிழந்தார். அவர் பலமுறை கடித்து, கால் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று வாரங்களில் சாட்டோ- ரோயல் கடற்கரைக்கு அருகில் இது மூன்றாவது சுறா தாக்குதல் ஆகும். அருகில் பயணித்த இரண்டு பேர் அந்த நபரை மீண்டும் கடற்கரைக்கு அழைத்து வந்து, அவசர சேவைகள் உதவியுடன் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை. சுறா தாக்குல் நடத்திய நேரத்தில் பலர் தண்ணீரில் இருந்தனர் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடற்கரைகளை மூடிவிட்டனர்,…

Read More

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மறுசீரமைப்பு பணிகளை முன்னரே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், நடைமுறைகளை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மறுசீரமைப்பு பணிகளும் தாமதமானது. மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை சில பகுதிகளாகப் பிரித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தச் செயற்பாட்டின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நிறுவனங்களுக்கு புதிய செயல்முறை மூலம் எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பும் கிடைக்கும்.

Read More

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி ஆகிய இருவரும் மாநாட்டின் இடையே நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, உளவு பலூன் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். உளவு பலூன் பிரச்சினையை குறிப்பிட்டு பேசிய பிளிங்கன் இது அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் பொறுப்பற்ற செயல் என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்த மாத ஆரம்பத்தில் மொன்டானா மாகாண வான்பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறப்பதை அவதானித்த ராணுவம் அது, உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என்று குற்றம்சாட்டியது. ஆனால், குறித்த பலூன் சீனாவோ வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா தெரிவித்திருந்தது. எனினும் அதை ஏற்க மறுத்த அமெரிக்கா, போர் விமானம் மூலம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, சமீபத்திய வாரங்களில் வாக்னர் குழு குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்ததாகவும், சுமார் 9,000பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். வாக்னர் குழு, ரஷ்ய சிறைகளில் அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும் பெரும்பாலான உயிரிழப்புகள் பயிற்சி பெறாத குற்றவாளிகள் என்றும் கிர்பி கூறினார். உயிரிழப்புகள் இருந்தபோதிலும், வாக்னர் குழு பாக்முட் நகரைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி தனது முதல் லெப்பர்ட் யுத்த டாங்கிகளை உக்ரைனுக்கு விரைவில் அனுப்ப முடியும் என்று கூறினார். ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், வருடாந்திர முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த உறுதிமொழியினை…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆனால், அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைக்காத காரணத்தால், தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதுடன், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம், மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மாநகர சபைகளின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்களின் கீழும், நகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் நகர மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழும் மாற்றப்படும் தெரியவருகிறது.

Read More

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (பெப்ரவரி 17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளளது. இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன்கொடுனர்களில் இருந்து மறுசீரமைப்புக்களை எதிர்பார்த்திருந்தது. எனினும் இந்தியா ஜப்பான் மற்றும் தனியார் பிணையாளிகள் கூட 10 வருட கடன் ரத்து மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு என்ற கொள்கைக்கு இணங்கிய நிலையில் சீனா இரண்டு வருட கடன் ரத்துக்கு அப்பால் செல்ல மறுத்தது. இதனையடுத்தே சீனாவின் ஆதரவில்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More

முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. பெப்ரவரி 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானியில் படி, மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. மேலும் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவைக்கள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்வதற்காக புகையிரதத்தில் ஏற வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று காலை புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் வஸ்கடுவ, சிரில் மாவத்தையைச் சேர்ந்த சி.டி.சமரவீர முதலிகே சிந்தா பிரியதர்ஷனி என்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார். இன்று காலை 6.03 மணியளவில் மருதானை நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் கொழும்பு நோக்கி பயணிக்க வந்த அவர், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த 940 இலக்க புகையிரதத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More