உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாடு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 36 மாநிலங்களின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். தேசிய அளவில் கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க மாநில அரசுகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு கேட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Author: admin
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு, 01. ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் 03. லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் 04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 05. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் 06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் 07. ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர் 08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர் 09. தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் 10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க…
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 சதவீதம் சரிந்து 1.145 பவுண்டாக இருந்தது இது 37 ஆண்டுகளில் காணப்படாத நிலை ஆகும். பிரித்தானிய பொருளாதாரத்திற்கான பலவீனமான பார்வை மற்றும் வலுவான டொலர் ஆகியவை ஸ்டெர்லிங் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து வங்கி கூறியது. உக்ரைனில் போர் தொடர்ந்ததால் இந்த ஆண்டு பிரித்தானியா மந்த நிலையை நோக்கி செல்வதை சிறிதும் தடுக்கமுடியாது என்று ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்தார். இது ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கத்தால் பெருமளவில் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார். 2022ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் பொருளாதாரம் சுருங்கும் மற்றும் 2023ஆம் ஆண்டு இறுதி வரை சுருங்கும் என்று இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் இன்று(வியாழக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அது தாமதமாகலாம் என கூறப்படுகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் பிரயோகித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 36 பெரிய மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 கிலோகிராம் மஞ்சளை இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கைப்பற்றியுள்ளனர். இதன் போது, பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குறித்த மஞ்சளானது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக குறித்த சந்தேகநபரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட மஞ்சள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வடைந்துள்ளது. 65 பேர் உயிரிழந்தாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளதாகவும் 26 பேரைக் காணவில்லை எனவும் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்டுவில் கடுமையான கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டுகளை அந்த நகர நிர்வாகம் அமுல்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள…
ஆப்பிள் இன்று ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை அறிவித்தது, இது மிகவும் மேம்பட்ட புரோ வரிசையாகும், இதில் டைனமிக் ஐலேண்ட் – ஐபோனை அனுபவிக்க ஒரு உள்ளுணர்வு வழியை அறிமுகப்படுத்தும் புதிய வடிவமைப்பு – மற்றும் எப்போதும் ஆன் டிஸ்ப்ளே. ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத வேகமான சிப் A16 பயோனிக் மூலம் இயக்கப்படுகிறது, iPhone 14 Pro ஆனது புதிய வகை ப்ரோ கேமரா அமைப்பை அறிமுகப்படுத்துகிறது, ஐபோனில் முதன்முதலில் 48MP முதன்மை கேமரா குவாட்-பிக்சல் சென்சார் மற்றும் ஃபோட்டானிக் எஞ்சின், மேம்படுத்தப்பட்ட படக் குழாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறைந்த ஒளி புகைப்படங்களை வியத்தகு முறையில் மேம்படுத்துகிறது. இந்த அற்புதமான முன்னேற்றங்கள், அன்றாட பணிகள், ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் இப்போது அவசரகால சூழ்நிலைகளில் கூட செயற்கைக்கோள் மற்றும் செயலிழப்பைக் கண்டறிதல் போன்ற அம்சங்களுடன் ஐபோனை மிகவும் இன்றியமையாததாக ஆக்குகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன்…
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது 15 மாத குழந்தையை தாக்க முயன்ற புலியிடம் சண்டையிட்டு போராடிய பெண் ஒருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.