தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது. அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க, வடமேல் சிட்னியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நடமாடவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிண்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தனுஸ்க 150,000 டொலர்கள் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதகாவும் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், தீ விபத்து குறித்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியானது காசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, கரணவாய், தும்பளை, குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள், 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், பாலம் ஒன்று உடைந்துள்ளமையினால் இவ்வாறு குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பாலத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மாணவி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி, அம்மாணவியை பாலியல் ரீதியாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இராணுவ சிப்பாய் கேகாலை பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது. மேலும், அச்சுறுத்தப்பட்ட மாணவி பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விய பயின்று வருவதாக கூறப்படுகிறது. இராணுவ சிப்பாய் சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த மாணவியை தொடர்பு கொண்டுள்ளதோடு, அவரது புகைப்படமொன்றை நிர்வாண புகைப்படமாக மாற்றி இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். எனவே, இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்காக பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அந்த மாணவி தகவல் வழங்கியதோடு, சம்பவ தினத்தில் சந்தேக நபரான இராணுவ சிப்பாயை நுவரெலியா பகுதிக்கு வருமாறு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய அழைத்துள்ளார். பின்னர், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் நுவரெலியா நகருக்கு வருகைதந்த போது அவர்…
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 134 ஓட்டங்களையும் வில்லி ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 288 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 46.5…
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையக மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என இ.தொ.காவால் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் மலையக மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இ.தொ.கா முன்வைத்தது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை அதிகரிப்பது சம்பந்தமாக எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி செயலகத்தில் இ.தொ.காவுடன் விசேட கூட்டம் நடத்தப்பட்டு தேவையான அளவு நிதி அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து ஊரை சேர்ந்த அச்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்த நிலையில். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அச்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதன்போது சம்பவத்தன்று இரண்டு கார்களில் உறவினர்களுடன் காதல் தம்பதி வசித்த வீட்டிற்கு சென்ற அச்சிதாவின் பெற்றோர் அவர்களை கடுமையாக மிரட்டியதோடு தங்கள் மகள் அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரின் தலைமுடியை மொட்டை அடித்துள்ளனர். பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டதாக அச்சிதா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போது அச்சிதா அளித்த…
கடல் எல்லையை மீறிவந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 14 பேர், யாழ்ப்பாணம் வெத்திலைகேணி கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை குவைத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. தண்டனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் எதியோபியாவைச் சேர்ந்த பெண். இன்னொருவர் குவைத்தைச் சேர்ந்த பெண். இவர்களுடன் குவைத்தைச் சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் சிரியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். கடைசியாக 2017 ஜனவரி 25-ஆம் திகதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில், 7 பேரை குவைத் நேற்று (15) தூக்கிலிட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றுப்படுதற்கு ஒருநாள் முன்னதாக சவுதியில் இரண்டு பாகிஸ்தானியர்கள் ஹெரோய்ன் கடத்தலுக்காக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, ‘இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும்…