புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள் மேலும் துருக்கிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார். துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து, நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அவருக்குத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார். திருமதி டெமெட் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையில் துருக்கிய முதலீடுகளை மேம்படுத்துவதற்கான தனது தூதரகத்தின் முயற்சிகளுக்கு இந்த உத்தரவாதம் உதவும் என்றார். விவசாய இயந்திரங்கள், மருந்து, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய துருக்கிக்கு இப்போது வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் கூறினார். கடந்த மாதம் சுகாதாரத் துறைக்கான மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் மேலும்…
Author: admin
கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம் என குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற மருத்துவர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு திணைக்களம் தேசிய வனவிலங்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளது, இது முன்னறிவிப்பின்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு முன்பு இருந்த 9,688 ரூபா கட்டணங்கள் தற்போது 14,920 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 649.2 வீத அதிகரிப்பை இலங்கை பெற்றுள்ளதுடன், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 37,760 பேர் வருகை தந்துள்ளனர். ஓகஸ்ட் இறுதி வரை, 496,430 பேர் வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற ஏனைய பிரச்சினைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் குறைந்துள்ளது. தற்போது இந்தப் பிரச்சினைகள் தணிந்து, இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை கைது செய்தனர். அதனை அடுத்து குறித்த இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகின் கொடுரமான பயங்கரவாத தாக்குதலான அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறித்த தாக்குதலில் இரட்டை கோபுரங்கள் இடிந்து வீழ்ந்ததுடன், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த 2001 ம் ஆண்டு 11 ம் திகதி பயங்கரவாதிகளினால் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மீதும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் 21 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியில் அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்களை இணைய வழி மூலம் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்காக சமர்பிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 300 அமெரிக்க டொலர்களாக தொகை, தற்போது 3,000 டொலர்கள் பெறுமதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கு வருகை தராமல் பிரதான தபால் நிலையங்கள் ஊடாக சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்த பின்னர் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக மற்றும் அவரது அணியினருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார விசேட செய்தியொன்றை அனுப்பியுள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் கேப்டன்களின் மேற்கோள்களை கீழே காண்க. இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: இறுதிப்போட்டியில் ஒரு அணியை கேப்டனாக வழிநடத்துவது உற்சாகமாக உள்ளது. கோப்பையை வெல்வதற்கான எங்கள் இலக்கிலிருந்து இப்போது ஒரு படி தூரத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கேப்டனும், அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஒரு அணியாக, சிறப்பாக செயல்பட்டு போட்டியில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. “இந்தப் போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, நாங்கள் சில சிறந்த போட்டிகளையும், சில கடினமான போட்டிகளையும் பெற்றுள்ளோம். சில சிறந்த ஆட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் மற்றும் வெவ்வேறு வீரர்கள் பிரகாசித்துள்ளனர் மற்றும் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.…
கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்துடன் முன்னிட்டு,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருந்தன.சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டிருந்தன.சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறையை பொருத்தமான காலவரையறையுடன் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தன. இது நடந்து சரியாக 20 மாதங்கள் ஆகிவிட்டன. மேற்படி கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்த பல விடயங்களை அதன்பின் வெளிவந்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை பிரதிபலித்தது.அது தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டும் ஒன்றாகவும் காணப்பட்டது.ஆனால் ஜெனிவா தீர்மானத்துக்குரிய சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது அது தமிழ்மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியுமளிக்கும் ஒன்றாக காணப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்குடன் காணப்படும்.ஆனால் ஜெனிவா தீர்மானங்கள் அவ்வாறு அரசாங்கத்தை…
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த விடையத்தை வலியுறுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்கள் இடம்பெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முன்னெடுப்புக்களை பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.