நாட்டை நேசிக்காத சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதைத் தடுத்து வருவதாகவும், யுத்தத்துக்குப் பின்னர் புலிகள் அமைப்பு பலம்பெற்றுவிட்டதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளுடன் இணைந்து வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இதுவொரு பாரதூரமானப் பிரச்சினை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டு்ம் எனவும் கூறினார்.
Author: admin
மாகாணமட்ட உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. மாகாணமட்டத்தில் நடைபெற்ற 20 வயது பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இன்று (2022.09.12) திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பங்குபற்றிய கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்று அகில இலங்கை தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திரு எஸ். கலையரசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். படத்தில் வெற்றியிற்றிய மாணவர்களும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் காணலாம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச ஆதரவு மற்றும் அதனை பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அந்தப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு வழங்கப்படக்கூடிய இருதரப்பு பலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண்கைதி உட்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் எம்.மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டையில் கோழி இறைச்சி கிலோ ஒன்று 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், பாகிஸ்தானை இலங்கை அணி தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றதை, ஆப்கானிஸ்தானில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் இந்த படுதோல்வியை ஆப்கான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். வீதிகளில் நடனமாடியும், பட்டாசுகளை வெடித்தும் அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியினரின் மோசமான களத்தடுப்பை விமர்சித்தும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காலி முகத்தில் போராட்ட செயற்பாட்டாளர் தமிதா அபேரத்னவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார். மெகசின் சிறைச்சாலையில் போராட்ட செயற்பாட்டாளர் தமிதா அபேரத்னவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி-லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் இருந்து நேற்று (11) ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 61 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளை பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் பாக்யராஜ் கூறுகையில், வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். எழுத்தாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இன்று மீண்டும் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை கொள்வனவு செய்யப்பட்ட செய்த அரிசிக்கு அரசாங்கம் பணம் வழங்காமை காரணமாக மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.