ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் கேமராவில் சிக்கியுள்ளார். வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சிறையிலிருந்து பாராளுமன்ற அமர்வுகளுக்குச் சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Author: admin
95 ரக ஒக்டென் பெற்றோல் இன்று (23)முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களிலிருந்து 95 ரக ஒக்டோன் பெற்றோல் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவை எதிர்வரும் 6 வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே நாளை முதல் 95 ரக ஒக்டோன் பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை அனுப்பியவர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்மொழிவதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு ஊக்குவிப்பதற்காக மேலும் பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார். தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் இடம்பெறுகிறது. இந்த வருடம் இப்பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்தி கள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 542 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் பத்து (10) புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். முன்னதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பதின்மூன்று (10) அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னர் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சில அமைச்சர்கள் இலாகாக்கள் கூடுதல் துறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படுவார்கள். புதிய அமைச்சர்கள் விவரம் வருமாறு: டக்ளஸ் தேவானந்தா- மீன்பிடி பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் மஹிந்த அமரவீர – விவசாயம் மற்றும் வன வளங்கள் மற்றும் வனவிலங்குகள் ரமேஷ் பத்திரன – தொழில்கள் விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அஹமட் நசீர் – சுற்றுச்சூழல் ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு நாள் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வைத்தியர் ஒருவர் பதிவிட்ட உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். “ஒரு தகப்பனாக அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். கோட்டாபாய ராஜபக்ச இதைப் படித்து, ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால், இந்த நிலைக்கு அவர் நேரடியாகப் பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார். நுவரெலியாவில் உரிய நேரத்தில் ஆட்டோவிற்கு எரிபொருள் கிடைக்காமையினால் வைத்தியசாலை செல்ல முடியாத நிலையில், பிறந்தே இரண்டு நாளான குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று 15 சிறைக் கைதிகள் தோற்றுகின்றனர். இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை யிலுள்ள ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 முன்னாள் போராளிகள், வட்டரெக்க திறந்த சிறை முகாமிலுள்ள சுனீதா சிறைச்சாலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 10 சிறார் குற்றவாளிகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அனைத்துக் கைதிகளும் மெகசின் சிறைச்சாலை, வட்டரெக்க சுனீதா சிறைச்சா லைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணை யாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இரண்டு எரிவாயுக் கப்பல்களுக்காக இன்று 7 மில்லியன் டொலர்களை செலுத்த எதிர்பார்ப்பதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறங்கியதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிவாயு நாட்டில் இருக்கும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். லிற்றோ எரிவாயு நிறுவனத்தில் தற்போது ஆறு நாட்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார். 80,000 சிலிண்டர்களில் 50,000 கோப் குழுவின் பரிந்துரையின் பேரில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் சேகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பது தொடர்பான பல குற்றச்சாட்டுக்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், அவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகளிடம் அறியத்தருமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.