பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
Author: admin
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள காரணத்தினால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(25) இடம்பெறவுள்ளதுடன், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரூபா வருமானம் கிடையாது என்ற காரணத்தினால் மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 40 வீதத்தை எட்டக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களை தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களை குறைக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் 6 மாத காலப் பகுதிக்குள் இடைகால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் 2 வருடங்களுக்கான திட்டங்கள் தொடர்பிலான யோசனைகளும் இந்த இடைகால வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படும். பணவீக்கம் அதிகரிக்கப்படும் அளவிற்கு மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும். அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிநாட்டு நட்பு நாடுகளிடம்…
கடவுச்சீட்டிற்கு (Passport) விண்ணப்பிக்கும் போது Online யில் முன்பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவே மக்களின் நலன் கருதி நாங்கள் ஒரு செய்முறை வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதிகம் பகிர்வதன் மூலம் அனைவரும் பயனடையட்டும். Special Thanks to Mr. Nowfer Rifkan
ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் சேவையின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இனிமேல் இந்த சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக அல்லது 0707101060 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம். அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019இல் ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பில் உள்ள இரு பிரபல ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்துவரும் கனமழைக்கு மத்தியில் எதிர்வரும் ஆறு மணித்தியாள காலப்பகுதிக்குள் பாலிந்த – நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக நீர்ப்பாச திணைக்களம் எச்சரித்துள்ளது. இதற்கமைவாக புளத்சிங்கள – மொல்காவ வீதி – வரகாகொட -கலவெல்ல வீதி – நாலியத்த- தபல வீதி முதலான் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதிகளை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர்மட்டம் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும். களுகங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர் நேற்று மாலை, நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி. ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. சிம்புவின் அறிக்கை இந்நிலையில், அதனை உறுதி செய்து நடிகர் சிம்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம். ஆனால், தற்போது அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டதனாலும், உயர் சிகிச்சைகாகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போது ,முழு சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார் சிம்பு. இலங்கைக்காக இவர் “நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க” என்கின்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 140 லீற்றர் பெற்றோலைக் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவர் ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உடுவர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையில் வைத்து அவர் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவராவார். சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 120 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமுலுக்கு வந்த எரிபொருள் விலையேற்றத்தால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் ஊடக மற்றும் பிரசாரச் செயலாளரான கபில கலாபிட்டகே தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 100 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டதாகவும், அதன் பின்னர் மேல் மாகாணத்தில் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். முச்சக்கர வண்டிச் சேவையில் 900,000 பேர் அங்கம் வகிக்கின்றனர். குறிப்பாக மேல் மாகாணத்துக்கு வெளியே மலையகப் பிரதேசங்களில் எரிபொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாகவும், எனவே ஒரு கிலோமீற்றருக்கு மாற்று கட்டண வீதத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.