செப்டெம்பர் 08 ஆம் திகதி தெமட்டகொட லக்கிரு செவன வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்டவரின் கைகளை வெட்டியதாகவும், வாள்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தெமட்டகொட, கலிபுல்ல வத்தே பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள், 3 கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்கள் 18-31 வயதுடைய வெல்லம்பிட்டிய, தெமட்டகொட மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர் ஒருவர் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திலும், தெமட்டகொடையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Author: admin
மருந்துகளின் விலை உயர்வால், புற்றுநோயாளிகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பிண்ணனியில் புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கக்கூடியவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலையின் நன்கொடை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம் அல்லது அங்குள்ள சுகாதார தாதியிடம் தொடர்பு கொள்ளலாம் எனவும் வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியினை தனியார் துறைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு ( MRIA) மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வருங்கால முதலீட்டாளர் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டில் பரவலான போராட்டங்கள் போன்ற பல காரணங்களால் விமானப் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்களும் திட்டமிட்டபடி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தில் பல விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இயக்குவதாக உறுதியளித்த போதிலும் ஒரு விமானம் கூட அங்கு தரையிறங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏர் இந்தியாவும் தங்கள் சேவைகளை இயக்க ஒப்புக்கொண்டதாகவும்ஆனால் அதன் வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 4.2ஆவது கிலோமீற்றர் பகுதிக்கு வந்த நச்சு உடும்பு (கபரகொயா) ஒன்றை காப்பற்ற முற்பட்ட வேளையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் இருந்த நச்சு உடும்பை லொறியொன்றின் சாரதி காப்பாற்ற நிலைத்து லொறியை திடீரென நிறுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த லொறியின் பின்னால் இருந்த பஸ்ஸான்றும், வேன் மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், மூவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சேதமடைந்த சகல வாகனங்களையும் கஹதுட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தெற்கு அதிவேக கெளனிகம போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் காமினியின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில், மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கலால் திணைக்களத்தின் சைபர் குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளுக்கு உதவி வழங்கியுள்ளது. அரசாங்கம் பெருமளவில் மதுபானம் மற்றும் புகையிலை ஆகிய இரண்டின் வரிப்பணத்தில் தங்கியிருப்பதாக பலர் கூறுகின்ற போதிலும், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுப்பதே இந்த கைது நடவடிக்கைகளின் நோக்கமெனவும் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி, தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஐஎம்எப் என்று மட்டும் சொல்கிறதே ஒழிய, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது மக்கள் வீட்டில் தங்கி கதவுகளைத் திறக்க முடியாது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கரிம உரக் கொள்கையினால் விவசாயியும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துவிட்டது என்று கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவும் கரிமக் கொள்கையினால்தான் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் சில மக்கள் பிரதிநிதிகள் வெட்கமின்றி இன்னும் இயற்கை உரம் பற்றி பேசுவது…
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதிகளை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும்அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாந்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறுவர்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வெள்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார். 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதால், அவ்வாறான கொப்புளங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுமாயின் பிள்ளைகளை வெளி இடங்களுக்கு அனுப்பாது சில நாட்கள் வரை வீடுகளில் வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீதமான விசேட வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விசேட வைத்தியர்கள் குழுவொன்று ஒரேயடியாக ஓய்வு பெறுவதனால் சுகாதாரத்துறையின் முகாமைத்துவம் மற்றும் சேவைகளை வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகலாம் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இது இளம் மருத்துவர்களுக்கு சாதகமான பின்னணியை உருவாக்கும் என குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , “இலங்கையின் வைத்தியசாலை அமைப்பில் தற்போது 2,278 விசேட வைத்தியர்கள் கடமையாற்றி வருவதுடன் கட்டாய ஓய்வுபெறும் வயது 60 என்பதனால் விசேட அதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் பின்வருமாறு ஓய்வுபெற உள்ளனர். அதன்படி, 222 சிறப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் 27 நிர்வாக மருத்துவ அலுவலர்கள் என மொத்தம் 249…