யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆட்கள் அற்ற வேளைகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை களவாடும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெற்று எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு , தொலைக்காட்சி பெட்டி , நீர் இறைக்கும் மின் மோட்டார் உள்ளிட்ட ஏழு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக திருட்டுக்குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக…
Author: admin
சிறந்த இயற்கை அமைப்பு, தனித்துவமான வனம் மற்றும் தூய்மையான காற்றுக்கும் அறியப்படும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 53 ஆவது நாள் போராட்டமாகவே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் என்றும் தங்கள் நிலம் தமக்கு வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோஷங்களை எழுப்பியவாறும் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என அந்த சங்கத்தின் செயற்குழு உறுதியளித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.என்.எச்.நிஹால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் உபுல் ரோஹன கூறியதை விட அதிகமான அஃப்லாடாக்சின் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விநியோகிக்கப்பட்ட திரிபோஷா மனித பாவனைக்கு உகந்ததல்ல எனவும் தொழிற்சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் செயற்குழு தெரிவித்துள்ளது. பொறுப்புள்ள தொழிற்சங்கமாக தாங்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்றும் தாங்கள் முன்வைத்த அனைத்து அறிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் நிஹால் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சம்பவதினமான இரவு சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களை இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன. இதனால், கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலைகள் 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரித்தது. இந்த நிலையில், மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதுடன், அடுத்த வார இறுதியில் பாரிய தொகை கோதுமைநாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், விலை குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
அரசாங்கத்திற்கும் நாட்டின் வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஜூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது. சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசகர் Clifford Chance இன் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இக்கலந்துரையாடலுக்கு முன்னதாக, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பாரிஸ் கிளப் மற்றும் 23 உறுப்பினர் அல்லாத நாடுகளின் தூதர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது ஜனாதிபதி…