Author: admin

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படுவதால், எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. குறிப்பாக நிலவும் பணவீக்க, டாலர் பிரச்சினை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, கைத்தொலைபேசிகள் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொஹுவளை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவித்தல் விடுத்துள்ளனர். குறித்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனவே, கொஹுவளை சந்திக்கு அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். 04 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். அடுத்த 05 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம் துரித பொருளாதார மறுசீரமைப்பு செயற்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம் மோசடியை ஒழிக்க விசேட செயலணி நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரை இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த…

Read More

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய நொதேண் பவர் அனல்மின் நிலையம் எனக்குத் தெரியாமல் யாழ்ப்பாணம் வராது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம் (31.05.2023) புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் கழிவு ஓயில் பிரச்சனையை ஏற்படுத்திய நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்படும் என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகின்றது. நொதேன் பவர் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட கழிவு ஓயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக 20 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் குறித்த நிதியை இன்னும் பலர் பெறாது இருக்கிறார்கள், அதற்குக் காரணம் நிதியை பெற்றுக் கொண்டால் குறித்த நிறுவனம் மீளச் செயற்படும் என்ற…

Read More

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளதால், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் (LCBs) வணிகங்களுக்கான கடன் வட்டி வீதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மதியவங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (01) மதியவங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாணய மதிப்பு அதிகரிப்பு, எரிபொருளின் விலை போன்றவற்றால் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னேற்றமடைந்த இலக்கு வரம்பை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி பண நிலைமைகளைத் தளர்த்துவதற்கான தீர்மானத்திற்கு வந்ததுடன், கொள்கை வீதங்களில் வலுவான சீர்திருத்தத்தை மேற்கொண்டது எனவும் தெரிவித்தார். ”மத்திய வங்கியானது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் முதன்முறையாக வட்டி வீதங்களைக் குறைத்து,…

Read More

300 இலட்சம் ரூபாவிற்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் கையிருப்பு கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மன்னாரில் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனை நிலுவையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் தண்டனை 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். நடாசா பௌத்த மதத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தமைக்காக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விட தீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More