Author: admin

சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களை வைத்திருந்த இராணுவ கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவலொன்றுக்கு அமைய கொஸ்கொட – கொடகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 24 கிராம் ஹெரோயின் மற்றும் 23 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

மோசடியான முறையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் இருந்து மகும்புர வரை மோசடியான முறையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி 34 பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் தொடர்பில் போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. தலா 1,200 ரூபாய் பெறுமதியான மோசடியான முறையில் அச்சிடப்பட்ட 34 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு 40,800 ரூபாய் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தமக்கு அறிவித்தவுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள், போலி டிக்கெட்டுகளை அச்சடித்த அச்சகம் மற்றும் அதன் வடிவமைப்பாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும்,…

Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு வேட்புமனுவை மீண்டும் அறிவிப்பதே சிறந்தது என ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளனர். 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, 80,672 வேட்பாளர்கள் முன்வந்துள்ளனர். 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி…

Read More

எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து ஒரு மூட்டை யூரியா உரம் 5,000 ரூபாவிற்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 03 பயிர்ச்செய்கைக் காலங்களின் பின்னர் இப்பருவத்தில் விவசாயிகளுக்கு உரம், யூரியா உரம் மற்றும் பண்டி உரம் ஆகிய மூன்று வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த வார இறுதியில் 22,500 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இலங்கை வந்ததாகவும், அதன்படி இன்று (12) முதல் அனைத்து விவசாய நிலையங்களுக்கும் உரம் விடுவிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

கடலோரப் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ, எகொடஉயன ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களில் 25 சதவீதத்தினர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், வருடத்தின் கடந்த சில மாதங்களில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐத் தாண்டியுள்ளது. இதேவேளை, வரலாற்றில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் அமையலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களமும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், 67 டெங்கு அபாய வலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த தரவுகளின் படி, இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,961 ஆகும். மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,435 ஆகும். டெங்கு நோய் பரவும் அபாயம் இது…

Read More

இன்று அதிகாலை 5.30 மணியளவில் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த 3 ஆண்டுகளில், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதைச் சம்பவங்கள் மற்றும் பதிவான வழக்குகளின் விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின்போது, பாரவூர்தி ஒன்றின் டயர் ஒன்றை மாடிப்படியில் இருந்து கீழே உருட்டியதால், மாணவனின் தலை, மண்டை ஓடு, மூளையில் காயம் உள்ளிட்ட பலத்த உடற் காயங்கள் ஏற்பட்டன. இந்தநிலையில், குறித்த நபர் இதுவரையில், முழுமையாக குணமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த மாணவனின் சகோதரியால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

Read More

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்தார். அதன்படி, இருபது ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை இரட்டிப்பாகும். அதனை, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விலை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபாய் கொமிஷன் (தரகு பணம்) 8 ரூயாக அதிகரிக்கப்பட வேண்டுமென கிருசாந்த சுட்டிக்காட்டினார். கமிஷன் தொகையை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை…

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பரிஸ் கிளப் முன்னர் அறிவித்திருந்தது. இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டன் மற்றும் பிரான்ஸிற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Read More