இலங்கை மின்சார சபையானது தமது சேவைகளில் மொத்த மற்றும் சில்லறை இணைப்புகளினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ் நிலையில் நிறுவனத்தில் பொருள் தட்டுப்பாடுகளின் காரணமாகவே இவ் தற்காலிக இடைநிறுத்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மின் சபை வெளியிட்ட அறிக்கையில் குறி ப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி முடிவுக்கு வந்ததும் சேவை இணைப்புகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என CEB மேலும் தெரிவித்துள்ளது.
Author: admin
அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினர் நேற்று (21) இரவு தீ வைத்துள்ளனர். நேற்று (21) நண்பகல் முதல் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்த போதிலும், கையிருப்பை பராமரிக்க தவறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இனந்தெரியாத கும்பலால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இரண்டு மாடி வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உடனிருந்ததாகவும், தீயினால் இரண்டாவது மாடி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் Monkeypox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக்கத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான இரசாயனப் பொருள்கள் எதிர்வரும் வாரங்களில் கிடைக்கவுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த காய்ச்சலானது, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. சிங்கள – தமிழ் புத்தாண்டிலிருந்து ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 950-980 ரூபாவாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக இந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளாந்தம் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட யோசனையொன்றை கையளித்துள்ளார். நாட்டின் பலவற்றை முக்கியப்படுத்தி இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது வெளிநாட்டில் வர்த்தகம் செய்யும் இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இரண்டு வருட காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியில் 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடுவதற்கு நான்கு நன்மைகள் முன்மொழிவுகளை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்த வைப்புத் தொகைகளுக்கு வருடாந்தம் 10 வீதம் இலங்கை ரூபாயில் வட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் பணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேறு ஏதேனும் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். பிரேரணைகளின் கீழ் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில், அத்தகைய நிலையான வைப்புத் தொகையை செலுத்தும் நபருக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலர் 25,000 பெறுமதியான வாகன இறக்குமதி உரிமத்தை வழங்குவது மற்றும் அந்த வாகனத்திற்கு அரசாங்கத்திற்கு…
அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று ( 21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நாளைய தினம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும், நீர் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்து திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கான அனுமதிக் கடிதம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரை யாடலின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரே அமைச்சரவை பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. மற்ற நான்கு எம்.பி.க்களில் மூவர் மட்டுமே மாநில அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சுமார் 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 23 அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். எவ்வாறாயினும், இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், புதிய நிதி அமைச்சர் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா…
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பங்களும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் அட்டைகள் ஒஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய வங்கியில் அந்நியச் செலாவணி இல்லாததால் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் பல மாதங்களாக முடங்கியுள்ளது. இருப்பினும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.