அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயன் புயல் நெருங்கி வருவதால் இலட்சக் கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கிய இயன் புயலால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, மீனவ கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் இயன் புயல் புளோரிடாவை நோக்கி நகருவதால், சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக Key West pier கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மக்கள் கடலில் குளித்தும் செல்பி எடுத்தும் குதூகலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Author: admin
முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக பிரசாத் எனப்படும் அமி சுரங்க மற்றும் சாமர சதுரங்க ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அமி சுரங்க என்ற நபர், பாதாள உலகக் குழுத் தலைவரான உரு ஜுவா மற்றும் கோத்தா அசங்க குழுவைச் சேர்ந்த தனுஷ்க ஆரியவன்ச என்றழைக்கப்படும் ரங்கா ஆகியோரின் சகோதரரும் கூட என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமாகலியா விளையாட்டரங்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹிம்புதான கொடௌட வீதி மற்றும் கடுவெல மேல் பொமிரிய ஆகிய…
தொழில் பயிற்சி அதிகாரசபை காரைதீவு பயிற்சி நிலையத்தினால் முன் கற்றல் அங்கீகாரம் (RPL) முறையினூடாக தேசிய தொழில் தகைமை தரம் 4 சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு காரைதீவுப் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அதிகாரிகளினால் சான்றிதழை பெற தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறியை கற்று கொண்டிருப்பவர்கள் (6 மாதமாக), தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், வியாபாரத்தை பதிவு செய்து நேரடியாக தொழிலில் ஈடுபடுபவர், 11/2 வருட அனுபவம் தொடர்ச்சியாக இருப்பவர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு வாய்ப்பும், திறமையும் அதிகம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதே போன்று online மூலம் எப்படி விண்ணப்பிக்க முடியும், 7 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் விடயம், போலிச் சான்றிதழ் எடுக்க முடியாத தன்மை, தனிநபருக்கு சான்றிதழ் எடுக்க முன்பு 25000 ரூபாய் செலவானது ஆனால் தற்போது ஜனாதிபதி நிதியத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற…
அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிக்கு சமூகமளிப்பதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் உபுல் ரோஹனவின் சர்ச்சைக்குரிய அஃப்லாடாக்சின் புற்றுநோயைக் கொண்ட ‘திரிபோஷா’ பற்றிய அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு 6,000 மாதாந்த செலவு கொடுப்பனவு வழங்கப்படாமை ஆகிய இரண்டு சம்பவங்களும் வேலைக்கு சமூகமளிக்காமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் தம்புத்தேகம வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இடைநிறுத்தியுள்ளது. இரண்டு சந்தேகநபர்கள் 2000 ரூபாயை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். தம்புத்தேகமவில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் ரூபாவை, பின்னர் கைது செய்த பொலிஸ் சார்ஜன்டினால் அவர்களது கொள்ளை முறியடிக்கப்பட்டது. சந்தேக நபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கி கொள்ளைக்கு உதவிய ராஜாங்கனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை விசாரணைகளின் மூலம் கைது செய்திருந்தனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதன் அடிப்படையில் SLPP உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த SLPP தீர்மானித்துள்ளதாக SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.
ராஜபக்சவின் மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு விரட்டப்பட்ட பின்னர், தற்போது ராஜபக்ச கைப்பாவையொருவர் ஆட்சியில் உள்ளதாகவும்,அந்த கைப்பாவை அரசாங்கம் பொது மக்களுக்கும் போலவே தேர்தலுக்கும் பயப்படுவதாகவும், அந்த அச்சத்தின் காரணமாகவே பல்வேறு சட்டங்கள்,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் எனவும், எதிர்க்கட்சி என்ற வகையிலும்,ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியிலும் நாம் எந்நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். விவசாயம்,பெருந்தோட்டம்,மீன்பிடி, சுயதொழில் போன்ற அனைத்து துறைகளிலிருந்தும் டொலர்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், உணவில் தன்னிறைவு பெறுவது போல்,உணவுக்கான பெருமதி சேர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,அதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால தொலைநோக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டம்,கடுகம்பளை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள்…
பிலியந்தலை மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் (27) பிற்பகல் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டின் அலமாரியில் இருந்த எழுபது பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும் யூரோக்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டில் இருந்து பெரும் தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு. அலமாரியின் இரகசிய பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் என்பன திருடப்பட்டுள்ளன திருட்டுச் சம்பவத்தின் போது அங்கு யாரும் இல்லை என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டுக்கு வந்தவர்கள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களின் கதவுகளை திறந்து அதனை வெளியே அனுப்பிவிட்டு திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த வீட்டை நன்கு அறிந்த நபர் அல்லது குழுவினர் இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் உத்தியோகபூர்வ பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும்…
நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளது. மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது. அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடமை நேரத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் அவ்வாறு நடந்துகொண்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.