அல் குர் ஆனையும், இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் ஊடகம் முன்னிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமை தொடர்பில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைப் பணிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாமல் குமாரவுக்கு எதிராக சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாளிகாவத்தையைச் சேர்ந்த மொஹம்மட் பழீள் மொஹம்மட் ரஸ்மின் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ‘ட்ருத் வித் சமுதித்த’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாமல் குமார, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நபர் ஒருவர் அல்லர் எனவும் அது ஒரு கொள்கை எனவும், அல் குர் ஆனே அதனை விதைத்ததாகவும் பொருள்படும் வண்ணம் பேட்டியளித்திருந்தார். இதனைவிட அல் குர் ஆனை நபியவர்களே எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்த பேட்டியில், நாமல் குமார தான் குறிப்பிட்ட குறித்த கருத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்…
Author: admin
சிறுவர்களுக்கு உரிய நாடொன்று வேண்டும் என அரசியல் மேடைகள்,போராட்டக் களங்களில் கதைத்தாலும் நாட்டுக்கு தகுதியான காயமற்ற சிறுவர்கள் வேண்டும் என எவரும் எங்கும் கதைப்பதில்லை என தெரிவித்த Stop Child Cruelty Trust அமைப்பின் ஸ்தாப தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க, கடந்த 18 மாதங்களில் 12 சிறுவர்கள் உடல், உள ரீதியான தாக்குதல்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 2 வருடங்களில் 17 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை நெருக்கடி தொடர்பாக விளக்குவதற்காக இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொண்டார். இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவிகளை பட்டியலிட்ட அவர், கச்சத்தீவை மீட்பது, தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் பிரச்னை குறித்தும் பேசினார்.
அம்பாறை-சம்மாந்துறை பிரதேசத்தில் நாளாந்தம் காட்டு யானைகளின் தொல்லைகள் காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளார்கள். இன்று(29) அதிகாலையும் சம்மாந்துறை நெற்புட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அரிசி ஆலைகளை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது. மூன்று அரிசி ஆலைகளில் உள்ள மதில் சுவர்கள், நெல் களஞ்சிய அறைகள், முன் வாயிற் கதவு ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு அங்குள்ள நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன. மேலும் பயன்தரும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர். அதனால், காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். இதேவேளை, இன்று காலை 09.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் யானை மற்றும் மனித மோதலை குறைப்பது தொடர்பான வழிகாட்டல் கூட்டமொன்று இடம்பெற்றது. இதில்…
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர்களுக்கு அதன் பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என உறுதியாக கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடனாளர்களுடனான பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மானிக்கப்படும் என அந்த நிதியத்தின் பிரதிநிதியொருவர் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும் ஊழியர்கள் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பயிர்ச்செய்கை வயல்களில் அத்துமீறி நுழையும் யானைகளை விரட்டுவதற்காக மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் யானை வெடிக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் சுமார் 14 இலட்சம் யானைக் வெடிகளை வாங்குவதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும், அவை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுவதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து கிராமங்களை அப்புறப்படுத்த வனவிலங்கு அதிகாரிகளிடம் இருந்து முறையான ஆதரவு கிடைக்கவில்லை என மக்கள் அடிக்கடி குற்றம் சாட்டுவது குறித்து விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போதே அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். கிராமத்திற்குள் காட்டு யானைகள் தாக்கும் போது மக்கள் வன ஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், எரிபொருள் தடை காரணமாக வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு குறித்த இடத்திற்கு செல்வதில் சில சமயங்களில் நடைமுறை சிக்கல்கள்…
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அவிசாவளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் 2009 ஆம் ஆண்டு அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலை சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கொலையாளி தொடர்பான வழக்கு தற்போது அவிசாவளை மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அரசாங்கத்தினால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய இந்த கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும். எனினும் இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.