சிறிது காலம் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த நபரை காலி – வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர். 35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Author: admin
எரிபொருள் பெற்று தருவதாக ஊரவர்களிடம் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் , பெட்ரோல் , மண்ணெண்ணெய் , டீசல் என்பவற்றை பெற்றுத்தருவதாக பலரிடம் பெரும் தொகையான பணம் வாங்கியதாக பணம் கொடுத்தவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் , தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில், அரசியல் ஸ்திரத்தன்மை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு குறித்தும் எடுத்துக் கூறியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமானது என கூட்டமைப்பு வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாய், மூக்கில் இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில், 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெறுகிறது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை நாளை முதல் அதிகரிக்கும். விலை அதிகரிக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் இதோ…
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை வடபகுதியைச் சேர்ந்த 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது. இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மலையக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி கொண்டிருக்கும் நுவரெலியா வலய கல்வி காரியலத்தின் கீழ் இருக்கும் சென்கிலயர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களாக குடி நீர் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றார்கள். குறித்த பாடசாலையில் சுமார் 600க்கு மேட்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 25 க்கு மேட்ப்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். அத்துடன், இந்த பாடசாலையில் ஒவ்வொரு வருடமும் சாதாரண தரம், 5 ஆம் ஆண்டு புலமை பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறு பேறுகளை பெற்று நுவரெலியா மாவட்டத்திலே சிறந்து விளங்குகின்றது. இவ்வாறான நிலையில், குறித்த பாடசாலையில் குடிநீர் இன்றி மாணவர்கள் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுக்கினறனர்.
நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதனபடி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.