Author: admin

2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்தமை தொடர்பில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்ட நிலையிலேயே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்கப்படாது என கால்பந்து உலக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, கால்பந்தாட்டத்தின் 64 போட்டிகளை நடத்தும் எட்டு மைதானங்களில் இரசிகர்களுக்கு பீர் விற்கப்படாது. உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் நாட்டு அதிகாரிகளுக்கும் கால்பந்து உலக நிர்வாகக் குழுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், ஃபிஃபா ரசிகர் திருவிழா, பிற ரசிகர் இடங்கள் மற்றும் உரிமம் பெற்ற இடங்கள் ஆகியவற்றில் பீர் விற்பனை கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் நாடு மிகவும் பழமைவாதமாக கருதப்படுகிறது மற்றும் மது விற்பனை மற்றும் பயன்பாட்டை இறுக்கமாக கட்டுப்படுத்துகிறது. ஃபிஃபாவின் முக்கிய பீர் அணுசரணையாளரான பட்வைசர், பீர் தயாரிப்பாளரான AB InBevக்கு சொந்தமானது மற்றும் உலகக் கிண்ணத் தொடரில் பீர் விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழழமை) ஆரம்பமாகும் கால்பந்து…

Read More

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். இதனை அடுத்து 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமானது. இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன்கள் என்றும் மொத்த செலவு 5,819 பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி…

Read More

முல்லைத்தீவு – கொக்கிளாய், கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், பெற்றோரின் கோரிக்கை அடிப்படையில் குழந்தையை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து உடனடியாக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தையின் தந்தை ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குழந்தை வீட்டிலிருந்து போதைப் பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

Read More

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 லட்சத்து 70 ஆயிரத்து 412 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குறித்த காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் மீள்குடியேற்றப் பிரிவு கூறுகிறது. கண்ணிவெடிகளை அகற்றும் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 ராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 3 லட்சத்து 65 ஆயிரத்து 403 ராணுவ வெடி பொருட்களும், 11 லட்சத்து 84 ஆயிரத்து 823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.…

Read More

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2 தொடக்கம் 3 மீட்டர் வரை கடல் அலைகள் மேல் எழலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read More

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று​​ கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 6 சிறுவர்கள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சையத் அப்துல்லா ஷா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. வேன் சாரதி, வீதியின் நடுவே இருந்த தடுப்புகளை பார்க்க தவறியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு…

Read More

கொரியாவில் உயிரிழந்துள்ள கண்டியைச் சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக, ஒன்பது மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு கொரிய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கொரியாவில் உயிரிழந்த கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என, லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர்,கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கொரிய தூதரகத்தின் உதவியுடன் நான்கு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது. அதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக கொரிய தூதரகத்துடன் நாம் கலந்துரையாடினோம்.இதன் பயனாக ஒன்பது மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையை வழங்க அவர்கள் இணக்கம் தெரிவித்தனர் அதேபோன்று ஜனாசாவை நாட்டுக்கு கொண்டுவர ஏற்பட்ட…

Read More

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை

Read More