ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிகட் குழுத் தலைவர் தசுன் சானக்கவுக்கு அவர் கல்வி கற்ற நீர்கொழும்பு மாரிஸ்டெலா கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிகழ்வு
Author: admin
சவுதிஅரேபியாவின் 92வது தேசிய தினம் 23ஆம் திகதி இரவு கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. துாதுவா் காலித் ஹமவுட், நசாா் அல்சான் அல் ஹட்டானி தலைமையில் தேசிய சுதந்திர தினம் கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன, சபாநாயகர் ,மகிந்த யாபா அபேவர்த்தன, நீதியமைச்சா் ்கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றாடல் அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் சுகாதார அமைச்சா் கேகிலிய ரம்புக்கலவெல, கலகெட அத்தே ஜானசாரத் தேரா், கங்காரம பன்சலையின் பிரதானி கலாநிதி கிரிந்த அஸ்சாச் தேரா், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் மனுச நானயக்கார, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன், முஸ்லிம் நாடுகளின் துாதுவா்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அத்துடன் சவுதி தேசிய கீதம், சவுதி கலாச்சார நிகழ்வுகளும் ஸ்கிரின் வழியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் தேசிய தின கேக்கினை சவுதி துாதுவருடன் இணைந்து அதிதிகள்…
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார். இதேவேளை, நியுயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், பல்வேறு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகள் COVID தொற்றுக்கு உள்ளாகியிருப்பதே இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். எனவே, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், அது குறித்து கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோரை அறிவுறுத்தினார்.
மருந்து பயன்பாட்டுக்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மருத்துவ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மருத்துவ தேவைக்கான கஞ்சா மூலிகையை உற்பத்தி செய்வதன் ஊடாக நாட்டிற்கு அதிகளவான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா மூலிகையின் ஏற்றுமதி பிரதிபலனை எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு வழங்க முடியும். சர்வதேச சந்தையில் மருத்துவ கஞ்சாவிற்கு 4 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான கேள்வி உள்ளது. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேற்கத்தைய ஆங்கிலேயப் பேரரசு காலத்தில் இந்த மருத்துவ செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. எனவே அந்த பாரம்பரிய மருத்துவத்துடனேயே மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பற்றிய விவாதம் எழுந்தது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது தனியார் பஸ் ஒன்றின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை (23) மாலை தொடங்கொட மற்றும் வெலிபன்ன இடைமாற்றங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் விபத்து ஏற்பட்ட போது, அதில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார். மின்சார கட்டணம் குறைக்கப்பட்டால் திறைசேரிக்கு 100 பில்லியன் நஷ்டம் ஏற்படும் என்றும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டார். இப்பிரச்சினைக்கு பிரதான காரணம் மின்சார சபை எனவும்,வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அந்த சபைக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மின்சார சபையினால் சில காலங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார். ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய வரி குறைப்புக்கள் அனைவருக்கும் நியாயமானவை என திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளில் மிகப்பெரிய வரிக் குறைப்புப் தொகுதியின் ஒரு பகுதியாக உயர்மட்ட வருமான வரி வீதத்தை திறைசேரியின் தலைவர் ரத்து செய்தார். வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைப்பது தவறு என்று தொழிற்கட்சி மற்றும் சில டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால், குவார்டெங், வருமான வரம்பு முழுவதும் வரிகளைக் குறைப்பதன் மூலம் நியாயமாக இருப்பதாகக் கூறினார். ‘மினி-பட்ஜெட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைகளின் தொகுப்பு, அரசாங்கக் கடன்களின் கூர்மையான அதிகரிப்பால் பல்லாயிரக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் செலுத்தப்படும். நிதியியல் ஆய்வுகளுக்கான சுயாதீன நிறுவனத்தின் இயக்குனர் போல் ஜோன்சன், பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது பொருளாதாரத்தில் பணம் செலுத்தப்படும் திட்டங்கள் ஒரு பெரிய சூதாட்டம் என கூறினார். வரி குறைப்பானது,…