உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டை ஒன்றின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 50 ரூபாயாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முட்டை விலை திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
Author: admin
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது இதன்படி பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மகளிர் சிறுவர் விவகாரம் மற்றும் சமூகவலுவூட்டல் பதில் அமைச்சராக அநுப பஸ்குவல் நியமிக்கப்பட்டுள்ளனர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு மேலாக பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொல்லை தாங்க முடியாமல் பசில் எடுத்த திடீர் முடிவு அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இவரை தொடர்பு கொள்ள பலர் முயற்சித்து வந்துள்ளனர். எனினும் இதுவரை அவர் பயன்படுத்திய எண்ணில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு மாத்திரம் பசில் ராஜக்ச புதிய இலக்கத்தில் இருந்து அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் இருந்து வேலை செய்யும் போது முதலாளிகளும் தொழிலாளர்களும் உற்பத்தித்திறனைப் பற்றி அடிப்படையில் உடன்படவில்லை என்று மைக்ரோசாப்டின் ஒரு பெரிய புதிய கணக்கெடுப்பு காட்டுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்வது அலுவலகத்தில் இருப்பது போல் பலனளிக்குமா என்று முதலாளிகள் கவலைப்படுகிறார்கள். 87 சதவீத தொழிலாளர்கள் தாங்கள் வீட்டிலிருந்து திறமையாக வேலை செய்வதாக உணர்ந்தாலும், 80 சதவீத மேலாளர்கள் உடன்படவில்லை. கணக்கெடுப்பு 11 நாடுகளில் 20,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா பிபிசியிடம், இந்த பதற்றம் தீர்க்கப்பட வேண்டும், ஏனெனில் பணியிடங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய பணி பழக்கத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை. “உற்பத்தித்திறன் சித்தப்பிரமை’ என்று நாம் விவரிப்பதை நாம் கடந்து செல்ல வேண்டும், ஏனென்றால் எங்களிடம் உள்ள அனைத்து தரவுகளும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தனிநபர்கள் தாங்கள் மிகவும் உற்பத்தி செய்வதாக உணர்கிறார்கள் என்று காட்டுகிறது – அவர்களின் நிர்வாகம் அவர்கள் உற்பத்தி செய்யவில்லை…
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கடற்கரை சூழலை மாசுபடுத்தாது அதன் அழகைப் பேனுவோம் எனும் தொனிப்பொருளில் கல்முனை கடற்கரை பள்ளியை அண்டிய கடற்கரைப் பிரதேசத்தை இன்று காலையில் கல்முனையில் அமைந்திருக்கும் இலங்கை கடற்படையினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இது தொடர்பாக வினவிய போது வாரத்தில் இரு நாட்களில் பிளாஸ்டிக் போத்தல்களையும் ஏனைய நாட்களில் உக்காப் பொருட்களையும் எமது படையினர் எமது முகாம் அமைந்துள்ள இக் கடற்கரை பிரதேசத்திலிருந்து அகற்றி இதன் சூழலை பாதுகாக்கின்றனர் என்றனர். இயற்கையை என்றும் மாசுபடுத்தாது அதன் அழகைப் பேணுவது எமது கடமையாகும். இதை கல்முனையில் இஸ்லாமாபாத் வாடி வீட்டு வீதியில் அமைந்திருக்கும் இலங்கை கடற்படையினர் அழகாகவும் முன்மாதிரியாகவும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பொது மக்கள் மற்றும் பொது நிருவணங்கள் நன்றியும் பாராட்டுக்களையும் கூறியதோடு இதை முன்மாதிரியாகக் கொண்டு ஏன் விளையாட்டுக் கழகங்கள் அமைப்புக்கள் மற்றும் இக்கடற்கரையில் விளையாடும் இளைஞர்கள் இப்பணியை தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்யக்கூடாது.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி வசம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நாடாளுமன்ற ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.
சீன ஜனாதிபதி பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை. இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் “அதிபர் ஜி ஜின்பிங்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.