சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) காலை இனம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையின் உதவியை நாடியிருந்தனர். இதனடிப்படையில் கடலில் மிதந்த 55-60 வயது மதிக்கத்தக்க வயோதிய பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுவரப்பட்டது. சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்பிக்கப்ட்டுள்ளது.
யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். கோட்டை பகுதியை நேற்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர் அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார். யாழ். கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகின்றதோடு சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் யாழ் மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். . மேலும் தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திம்புள்ளபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா என்ற மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் சமயலறையில் தனது மகளுடன் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து அந்தப் பெண் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவித்தனர். சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீரற்ற காலநிலை…
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதாந்தம் வட்ஸ்அப் இந்தியா நிறுவனம் முடக்கி வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் இதேபோன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 23 இலட்சம் கணக்குகளை வட்ஸ்அப் முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மருத்துவ பீடத்திற்கு 2,035 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன் பொறியியல் பீடத்திற்கு 2,238 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 2021ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அரசாங்கம் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது அது நாட்டின் அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். இலவச சுகாதார சேவைகள் வழங்கப்பட்டாலும், நாட்டில் அனைவரும் அதற்கு வரி செலுத்துவதாகவும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள் சுகாதாரம் பேணப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் அடுத்த வருட தொடக்கத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று (03) அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாவதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் செப்டெம்பர் 15ஆம் திகதி பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் சுமார் 100,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில்,நேற்று(02.10.2022) சுமார் 10,000 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர். இதேவேளை ஒக்டோபர் 1 ஆம் திகதி சிறுவர்கள் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு 11,752 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட நுழைவுச்சீட்டுகளை வாங்கியுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவித்துள்ளார். இதற்கமைய,“வார நாட்களில் இந்த கோபுரம் நண்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். இந்த…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.