தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு இடத்தில் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. இந்தநிலையில் மொத்த தொகையான 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐந்தாண்டுகளில் செலுத்தி முடிக்க வேண்டும். எனவே தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம் மட்டுமே.” என்று கூறியுள்ளார்.
Author: admin
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என நாட்டு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பொது மக்கள் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை சிறுதானியங்களைக் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் ஒன்றினை வகுக்கவுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் அதிகம் கவனிக்கப்படாத பிள்ளைகள், பெற்றோர் வெளிநாடுகளில் உள்ள சிறுவர்கள் இதற்கு அதிகமாக இலக்காவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் எனவும் அதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரான ஜோர்ஜியா மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்வாகியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியின் வலதுசாரி அரசாங்கத்தை மெலோனி அமைப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 26 சதவீத வாக்குகளுடன் பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சி, மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரோமில் உள்ள தனது கட்சியின் தேர்தல் இரவு பிரச்சார மையத்தில் மெலோனி உரையாற்றினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘இத்தாலியின் பிரதர்ஸ் தலைமையிலான வலதுசாரி அரசாங்கத்திற்கு ஆதரவாக இத்தாலியர்கள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர். அனைத்து இத்தாலியர்களுக்காகவும், மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், இத்தாலியர்கள் என்று பெருமைப்பட வைப்போம். நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள், நாங்கள் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்’ என கூறினார். அதன் கூட்டணிக் கூட்டாளிகளான கடும்போக்குவாதியான மேட்டியோ சால்வினியின் லீக் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபார்வர்ட் இத்தாலி முறையே 8.7…
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி நாய் என்பற்றை திருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக வைத்தியர் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுவரும் 5 மாணவர்களை கைது செய்ததையடுத்து வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை…
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை உள்ளீர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய கரு ஜயசூரிய, மக்களின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்ததினால் நாடு அழிவடைந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் முன்னதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண் ஊழியர்கள் சேலை, ஒசாரி என அழைக்கப்படும் கண்டியன் புடவை அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்று நிருபம் வெளியான பின்னர் பரிந்துரைக்கப்படும் ஆடைகளுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான பொருத்தமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள் பயன்படுத்தும் புடவைகள் மற்றும் ஏனைய ஆடைகளின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நல்லவர், இன்றும் அவரை நாம் மதிக்கின்றோம். ஆனால் அவர் இன்று இருக்கும் இடம்தான் சரியில்லை. அதாவது தனி ஆளாக இருப்பதால், செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்துள்ளார். ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் அவர் உணர்வார். மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சக்களின் சொல்கேட்டே ஜனாதிபதி ரணில் இதனை செய்துள்ளார். அரசாங்கத்தில் இணைவதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஆணை இல்லாத இந்த…
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ளது. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, வீதி போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது. அட்லாண்டிக் மாகாணங்களான நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கைகள் விடப்பட்டன. நாட்டின் கிழக்குப் பகுதியில் 25 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். இது திடீர் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும். விழுந்த மரங்கள்…
தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என நாடடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை கலவரத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.