ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார். . எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட மின்வெட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது கொண்டுவரப்படும் எரிபொருட்கள் மூலம் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும் நிரந்தரத் தீர்வு தற்போது வரை எட்டப்படவில்லை.
Author: admin
கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில் இராணுத்தினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, கவச வாகனங்களுடன் இன்று காலை முதல் கொழும்பு நகரில், கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், விசேட படையணியின் உந்துருளி பிரிவு, கொழும்பு, பிட்டகோட்டை, மிரிஹான, கிருலப்பனை, கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் இருந்து 400 யூரியா உர மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உர மூட்டைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இதேவேளை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிலும் 60 எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அமைதியின்மையின் போது அம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் அனைத்து நபர்களையும் கேட்டுக் கொள்கிறது. அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்ற மோதலின் போதும் சில அம்பியூலன்ஸ் வாகனங்கள் சேதமடைந்துள்ளன என அச்சங்கத்தின் தலைவர் டி. விஜேசிங்க தெரிவித்தார். அம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பங்கு நோயாளி களை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகும். அனைத்து நோயாளிகளின் உயிரையும் காப்பாற்ற அம்புலன்ஸ் சாரதிகள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். அம்புலன்ஸ்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்தால், பொலிஸ் பாதுகாப்பின்றி நோயாளர்களை ஏற்றிச் செல்ல முடியாது என சங்கத்தின் தலைவர் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை இந்தியா மறுத்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், “இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊக அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது. இந்த அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்தார்” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பதவியை திங்கட்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே பிரதமர் இல்லத்தைவிட்டு வெளியேறிய ராஜபக்க்ஷ குடும்பத்தினர் கடற்படை தளத்திற்கு நேற்று வந்தனர். தொடர்ந்து, கடற்படை தளத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். கடற்படை தளத்திலிருந்து மஹிந்த ராஜபக்க்ஷ, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதை உயர் ஆணையம் கவனித்து வருகின்றது.இந்த தகவல்கள் அனைத்து தவறானவை. இதில், எந்தவித உண்மைகளும் இல்லை. இந்த…
நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இதன்படி ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன்படி நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார். சம்பவ இடத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது. பொலிஸ்மா அதிபர்…
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் (ஜிஎம்ஆர்) நேற்று அறிவித்துள்ளார். அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும் நிறுத்தப்பட்டன
பலத்த மழையினால் 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி *களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக* தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று (11) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும். 💠 *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW* 📌 *மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்.* 📌 *பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்* 💠 *MNO | XYZ* 📌 *மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்* 💠 *CC* 📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.* *முதலாம் கட்டம்* 📌09:00 AM -11:00…