எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை. எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும். நவம்பர் மாத நடுப்பகுதியின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Author: admin
எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பல சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சுமார் 2,000 வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மா விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு – பாலத்துறை, கஜிமா தோட்டத்தில் பரவிய தீயினால் 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 106 சிறுவர்களும் அடங்குகின்றனர். மாளிகையில் வசிப்போருக்கு இங்கிருந்த சேரி வீடுகள் அவலட்சணமாக தென்பட்டிருந்தாலும் சுமார் 300 பேருக்கு கஜிமா தோட்டம் அடைக்கல பூமியாக இருந்தது. எனினும், நேற்றிரவு ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேரத்திற்குள் இடம்பெற்ற அனர்த்தத்தால் அவர்கள் அனைவரும் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தமது வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் மூன்று சந்தர்ப்பங்களில் தீக்கு இரையாக்கி விட்டு, சாம்பராகியுள்ள தமது குடியிருப்புகளுக்கு அருகே செய்வதறியாது இன்றும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கஜிமா தோட்டத்தில் தீயினால் 54 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இங்கிருந்த 220 குடியிருப்புகளில் மேலும் 11 குடியிருப்புகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, கஜிமா தோட்டத்திற்கு இன்று காலை சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இடம்பெயர்ந்த மக்களை முகத்துவாரத்திலுள்ள சனசமூக நிலையம் மற்றும் விகாரையொன்றில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.…
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றை 5ஆவது இருபதுக்கு20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தநிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து. இதன்மூலம் 7 இருபதுக்கு 20 போட்டிகளைக் கொண்ட குறித்த தொடரில் பாகிஸ்தான் அணி 3 க்கு 2 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்களிடையே உணவு வேளை என்பது நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள உலக உணவுத்திட்டம், நாடாளவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுவதனால் அநேகமானவர்கள் பல்வகைமை குறைந்த உணவுகளையே உட்கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். கடந்த 26 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் வைத்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் தனது ஆதரவாளர்களுடன் மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சிற்கு சொந்தமான WP KX 8472 என்ற இலக்கமுடைய வாகனத்தில் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய உரிய சலுகைகளை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கி முறையைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து அவசர அறிக்கையை வழங்குமாறும் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாகாணம் மோசஸ் லேக் பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் இயக்கப்பட்டது. 30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கலாம் எனவும், 150 முதல் 250 மைல் தூரம் வரையிலான தூரத்துக்கு இந்த விமானத்தை பயன்படுத்தலாம் என்றும் Eviation நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு, 50 ரூபா விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது. கடந்த 23 ஆம் திகததி முதல் அமுலாகியுள்ள இந்த விசேட பண்ட வரி 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வட்டி விகித அதிகரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சில வாகனங்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர தெரிவித்தார். இதன்படி, Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Toyota Axio, Toyota Premio, Toyota RACE, C.H.R, வெசல், கிரேஸ் போன்ற கார்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக குலதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.