கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார். சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அறிவி்க்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் முறையற்ற முறையில் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் 2015/5 ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை வலியுறுத்திய கல்விச் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால் இதுபோன்ற பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு என அவர் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களிடம் இருந்து தேவையின்றி பாடசாலை ஒன்று பணம் கேட்கும் பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என செயலாளர் வலியுறுத்தினார். ஹட்டன் கொட்டகலை போகஹவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தின நிகழ்வு நடத்தியதற்காக…
Author: admin
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 3 வருடங்களும் எட்டு மாத குழந்தையொன்றை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய தொம்பகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர் நேற்று (01) பல சந்தர்ப்பங்களில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். குழந்தையின் தாய் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார், இதன்போதே சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்துள்ளார். சந்தேகநபர் சியாம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக காயமடைந்த குழந்தை தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமணத்துக்காக மணப்பெண் தேவையென விளம்பரம் செய்து 2 கோடிக்கு அதிகமான மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹோமாகம குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கம்பஹா உளுகம்பொல பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவர் தனக்கு மணப்பெண் தேவையென பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளதோடு, பத்திரிகைகளில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மணமகன் தேவையென காணப்படும் விளம்பரங்களுக்கும் பதில் வழங்கியுள்ளார். இவ்வாறு ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரிடம் திருமண ஆசைகாட்டி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றதாக குறித்த பெண்ணால் ஹோமாகம குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹோமாகம குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டனர். இந்நிலையில், குறித்த சந்தேக நபர் பாணந்துறை. பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த நபர் தொடர்பில் நாட்டில்…
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டு மக்களைத் தூண்டி விடும் இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் அரச ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து ரயில் அனுமதிச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணித்தவர்களிடமிருந்து அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ரயில் அனுமதிச் சீட்டின்றி 129 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான இரண்டு நுழைவாயில்கள் காணப்படுவதுடன், அந்த நுழைவாயில்களில் பயணித்தவர்கள் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இதன்போது ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை நுழைவாயில் ஊடாக அனுமதிச்சீட்டுகள் இன்றி பயணித்த 129 பேரிடமிருந்தே இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் கொம்பனித் தெரு ரயில் நிலையத்தில் 18 கனிஷ்ட ஊழியர்கள் இருக்க வேண்டிய போதிலும் தற்போது 06 பணியாளர்கள் மாத்திரமே பணிபுரிவதாகவும் இதன் காரணமாக மற்றைய வெளியேறும் உத்திரானந்த மாவத்தை நுழைவாயிலில் சோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, ரயில் நிலையங்களில் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில்…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 3 மாதங்களாக பராமரிக்கப்பட்ட நிறை குறைந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவொரு வரலாற்றுச் சாதனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு சுமார் 500 கிராம் நிறையுடைய ஒரு பெண் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தது. அந்தக் குழந்தை கடந்த 84 நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முதிராத குழந்தை பராமரிப்புப் பிரிவில் அதிதீவிர கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் நிறை 1.45 கிலோ கிராம் என்ற வளர்ச்சி நிலையை அடைந்தபோது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தயாயும் சேயும் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுண்டி சாலைக்கு சிற்றுண்டி வழங்கும் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. போதனா வைத்திய சாலை வளாகத்தினுள் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி விட்டு, சிற்றுண்டிகளை ,சிற்றுண்டி சாலைக்கு கொண்டு சென்று வழங்கி விட்டு , மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்த போது , மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து கொண்டார். அது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகத்திடமும் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன. வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டிக்கான டீசல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.
காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து கீழே விழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து ஆபத்தான வகையில் பைக் ஓட்டியதாக கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரன், ஹரிபிரசாத் ஆகியோர் கைது.